மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், அவர்களில் 12 பேரை அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் தன்பக்கம் இழுத்தது. இந்நிலையில், மேகாலயா காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவ ரான ரிச்சார்ட் எம். மாரக்-கும் காங்கி ரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள் ளார். இது காங்கிரசுக்கு மேகாலயா மாநி லத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.