ஸ்டாக்ஹோம், அக்.02- கொரோனா தடுப்பூசி கண்டு பிடிப்பில் முக்கிய பங்கு வகித்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரே வீஸ்மேன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் உள்ள மரபு சங்கிலியான ஆர்என்ஏ-வில் (RNA) பல பிரதிகள் இருக்கும். இதில் ஒன்றுதான் எம்ஆர்என்ஏ (mRNA). இந்த எம்ஆர்என்ஏ பிரதி யை தனியாக பிரித்தெடுத்து, அதை போலவே போலியான ஒன்றை உரு வாக்கி அதை உடலுக்குள் செலுத்தினால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், போலி யான எம்ஆர்என்ஏ-வை எதிர்த்து சண்டை செய்யும். பின்னர் இதே போன்று எப்போதாவது உண்மை யான எம்ஆர்என்ஏ வந்தாலும் அதற்கு எதிராக சண்டை செய்து, தொற்று பாதிப்பிலிருந்து மனித னை காப்பாற்றும். இதை அடிப்படையாக கொண்டுதான் பைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கின. அந்த வகையில், கொ ரோனா தொற்றுக்கு எதிரான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசி யை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு மருத்து வத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.