புதுதில்லி, செப்.5- மாநில அரசின் அனைத்து திட்ட பேனர்க ளிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், ஜிஎஸ்டி ரசீதுகளிலும் கூட மோடியின் புகைப்படம் போடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கிண்டலடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், பீர்கூர் பகுதி யில் உள்ள ரேசன் கடையில், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 2-ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரேசன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை? என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷிடம் சண்டைக்குப் போனார். “நீங்கள் (மாநில அரசு) 35 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குகிறீர்கள்.
அந்த 35 ரூபாயில், 30 ரூபாயை ஒன்றிய அரசு செலுத்துகிறது. போக்குவரத்துச் செல வையும் ஒன்றிய அரசே ஏற்கிறது. ஆனால், நீங்கள் ரேசன் அரிசியை மாநில அரசே மக்க ளுக்கு வழங்குவது போல கூறிக் கொள்கி றீர்கள்” என்று மாவட்ட ஆட்சியரிடம் கோப மாக தெரிவித்தார். மேலும், “பிரதமர் மோடி யின் பேனரை வைக்க வேண்டும், இல்லை யென்றால் எங்களது (பாஜக) கட்சியினர் வைப் பார்கள்” என்றும் ஆட்சியரை எச்சரித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று அப்போதே பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். ஒன்றிய அமைச்சர் பார்க்கிற வேலையா இது? என்றும் “மோடியை துதி பாடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும், மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவும், நிர்மலா சீதாராமனுக்கு வெளிப்படை யாக கண்டனம் தெரிவித்தார்.
புதுதில்லி, செப்.5- மாநில அரசின் அனைத்து திட்ட பேனர்க ளிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், ஜிஎஸ்டி ரசீதுகளிலும் கூட மோடியின் புகைப்படம் போடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கிண்டலடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், பீர்கூர் பகுதி யில் உள்ள ரேசன் கடையில், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 2-ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரேசன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை? என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷிடம் சண்டைக்குப் போனார். “நீங்கள் (மாநில அரசு) 35 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குகிறீர்கள். அந்த 35 ரூபாயில், 30 ரூபாயை ஒன்றிய அரசு செலுத்துகிறது. போக்குவரத்துச் செல வையும் ஒன்றிய அரசே ஏற்கிறது. ஆனால், நீங்கள் ரேசன் அரிசியை மாநில அரசே மக்க ளுக்கு வழங்குவது போல கூறிக் கொள்கி றீர்கள்” என்று மாவட்ட ஆட்சியரிடம் கோப மாக தெரிவித்தார். மேலும், “பிரதமர் மோடி யின் பேனரை வைக்க வேண்டும், இல்லை யென்றால் எங்களது (பாஜக) கட்சியினர் வைப் பார்கள்” என்றும் ஆட்சியரை எச்சரித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று அப்போதே பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். ஒன்றிய அமைச்சர் பார்க்கிற வேலையா இது? என்றும் “மோடியை துதி பாடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும், மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவும், நிர்மலா சீதாராமனுக்கு வெளிப்படை யாக கண்டனம் தெரிவித்தார்.
“நீங்கள் ஒன்றும் இங்கு அறக்கட்டளை நடத்தவில்லை. ஜனநாயக நாட்டில் மக்க ளின் வரிப் பணத்தில்தான் அரசின் அனை த்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படு கின்றன. இந்த உண்மையை மறந்துவிட்டு ஆணவத்துடன் செயல்படும் உங்கள் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அராஜக போக்கை கைவிட்டு நல்வழியில் நடந்து கொள்ளுங்கள்” என்று திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜூம், நிர்மலா சீதா ராமனை டுவிட்டரில் கடுமையாக சாடி னார். தெலுங்கானா மாநில ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் ஒருபடி மேலே சென்று, அரசுத் திட்டங்களில் மோடி புகைப்படம் இடம்பெற வேண்டும்... அதுதானே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசை... அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறி, “சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விலை ரூ.1105” என்று குறிப்பிட்டு அதன் அருகில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை இடம்பெறச் செய்தனர். “நீங்கள் மோடி-ஜியின் படங்களைத் தானே விரும்பினீர்கள்.. நிர்மலா சீதாராமன் ஜி.. (@nsitharaman ஜி), இதோ.. மோடி யின் படங்கள்” என்று சிலிண்டர்களின் படங்களைக் காட்டி, டி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் எம்.கிரு ஷாங்க் கிண்டலடித்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜிஎஸ்டி ரசீதுகளிலும் மோடியின் புகைப்படத்தை அச்சிடலாம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டிருக்கும் அவர், ‘ஒருவேளை ஜிஎஸ்டி ரசீதுகளிலும் மோடியின் புகைப் படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல; மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்த மானது. இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்து கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.