“வர்த்தகத்திற்காக நாட்டின் மரியாதையை மோடி ஏன் சமரசம் செய்தார்?”
2025 மே மாதம் பஹல்காம் தாக்குதலால் இந்தி யாவிற்கும் பாகிஸ்தா னுக்கும் இடையிலான மோதலின் போது “ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப் பட்டன” என அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று கூறியுள்ளார். ஆனால், அந்த போர் விமா னங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவை என்றும், எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன என்பதையும் டிரம்ப் குறிப்பிடவில்லை. அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடனான இரவு விருந்தின் போது டிரம்ப் இவ்வாறு கூறியிருந்தார். முன்னதாக, இந்தியாவின் “5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக” பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”இந்தியாவுக்கும் பாகிஸ்தா னுக்கும் இடையேயான போரில் 5 ஜெட் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வர்த்தகத்தை முன்நிறுத்தி இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையி லான போரை நிறுத்தியதாக 24ஆவது முறையாகக் கூறியுள்ளார். டிரம்ப் இப்படி தொடர்ந்து சொல்லி வருகிறார், ஆனால் மோடி அமைதியாக இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வர்த்தகத்திற்காக நாட்டின் மரியாதையை மோடி ஏன் சமர சம் செய்தார்?” என அதில் கேள்வி எழுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் நேரு பதிலடி
சென்னை: எங்கள் கூட்டணி சரியாகவும் உண்மை யாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் ரூ. 164.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி களை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேருவிடம்,“திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அவமானப்பட்டு உள்ளனர் எனக் கூறி அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவமானப் பட்டார்கள் என்று அவரிடம் போய் சொன்னார்களா? அவர்தான் (பழனிசாமிதான்) அவமானப்பட்டு நிற்கிறார். ஒருத்தர் கூட்டணி ஆட்சி இருக்கு என்கிறார். ஒருத்தர் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அவர்தான் அடிபட்டு கிடக்கிறார். எங்கள் கூட்டணி எல்லாம் சரியாகவும் உண்மை யாகவும் உள்ளது” என்றார்.
ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோ விலூர் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு மாவட்டச் செயலாளரும், பாமக செயல் தலைவர் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளரும் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் அன்புமணி ஆதரவாளர் செழியன் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பெட்ரோல் பங்கில் ராமதாஸ் அணியை சேர்ந்த ராஜ்குமார் டீசல் போட்டுள்ளார். அதற்கு பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது. பங்க் ஊழியர் மாறன் என்பவர் பணம் கேட்டதால் ராஜ்குமாருடன் காரில் வந்த வர்களுக்கும் பங்க் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்புமணி ஆதரவாளர் செழியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) விழுப்புரத்தில் அன்பு மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது.
10 ஆண்டுகளில் 200 சதவிகிதம் உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 200 சத விகிதம் அதிகரித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 மருத்துவக் கல்லூரி களில் 11 ஆயிரத்து 700 மருத்துவ இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீட்டு இடங்கள் என மருத்துவ இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணம் 2015 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டு 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது இந்த ஆண்டு மட்டும் சுமார் 1.50 லட்சம் ரூபாய் அளவில் கட்டணம் உயர்ந்துள்ள தாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தனி யார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக் கான கல்விக் கட்டணம் 1.5 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
306 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 306 பேர் ஆஜ ராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை செப்.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022 ஜூலை 13 அன்று மர்மமான முறை யில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது உறவினர் கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஜூலை 17 அன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 53 சிறுவர்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
காலிப் பணியிட அறிவிப்பு ரத்து!
சென்னை: “அவசர காலங்களின்போது காலிப்பணியிடங்களை அதிகரிக்கலாம். தற் போது, அப்படி ஒரு அசா தாரண சூழல் இல்லை என்பதால் இயற்கை, யோகா மருத்துவப் பணி களுக்கான காலிப்பணி யிடங்களின் எண்ணிக்கை 35-இல் இருந்து 54 ஆக அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யப் படுகிறது” என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பருவமழை 6 சதவிகிதம் குறைந்தது
சென்னை: தமிழ் நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 6 விழுக்காடு குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45 விழுக் காடு கூடுதலாக பெய்து உள்ளது. சென்னையில் இயல்பாக 124.4 மி.மீ. மழை பொழியும் நிலை யில் இதுவரை 180.8 மி.மீ. மழை பொழிந்து உள்ளது.
அதிமுக கூட்டணி ஜமுக வெளியேறியது!
சென்னை: 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதர வளித்து வந்த ஜனநாயக முஸ்லிம் கட்சி வெளி யேறியது. பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறி வித்துள்ளது. அதிமுக வில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு தருவதாக அக்கட்சி நிறு வனர் தமீம் அறிவித்தார்.
சீமான் மீது மாதர் தேசிய சம்மேளனம் புகார்!
சென்னை: பெண் களை தொடர்ந்து இழிவு படுத்தும் நோக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தினர் புகார் அளித்துள் ளனர்.