‘‘குறைந்தபட்ச ஆத ரவு விலை (MSP),பூஜ்ய பட்ஜெட் இயற்கை விவசாயத்தை ஊக்கு விப்பது உள்ளிட்ட வேளாண் விவகாரங் கள் தொடர்பாக ஆலோ சிக்க வெகு விரைவில் குழு அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசின் வேளாண் துறை செயலா் சஞ்சய் அகர்வால் கூறியுள்ளார். “இந்தக் குழு குறித்து ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே அதுகுறித்த திட்டங்கள், நோக்கங்களை தெளிவாக வரையறுத்து செயல்பட வேண்டியுள்ளது’’ எனவும் அவர் கூறி யுள்ளார்.