புதுதில்லி, மார்ச் 27- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஜோடனை செய்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்திடும் பாஜக வின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் புதுதில்லி யில் உள்ள மத்தியக்குழு அலு வலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. திங்க ளன்று அதன் மீதான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஜோடனை செய்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யிலிருந்து பதவி நீக்கம் செய்தி டும் பாஜகவின் நடவடிக்கை களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கண்டனம் தெரி வித்துக்கொள்கிறது.
ராகுல் காந்திக்கு தண்டனை அளித்த விதமும், அவசர அவசர மாக அவரைப் பதவி நீக்கம் செய்திருப்பதும், பாஜகவின் அருவருப்பான எதேச்சதிகார குணத்தைப் பிரதிபலிக்கிறது மற்றும் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள எந்த அளவிற்கு அது சகிப்புத் தன்மையற்று இருக்கிறது என்பதையும் அப்பட்டமாகக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் பலவற்றின் தலைவர்களைக் குறிவைத்து ஏற்கனவே மத்திய புலனாய்வு முகமைகளை அது எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி துஷ்பிர யோகம் செய்துவந்தது. இப் போது ராகுல் காந்தி மீதான நட வடிக்கை அதன் உச்சமாகும். ஆர்எஸ்எஸ்/பாஜக வகை யறாக்கள் பல்வேறு மாநிலங்க ளில் எதிர்க்கட்சித் தலைவர் களுக்கு எதிராக அற்பக் கார ணங்களுக்காக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்தி ருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவ ரும் தில்லி மாநில துணை முத லமைச்சருமான மணீஷ் சிசோ டியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கி றார். அதன்பின்னர் இப்போது லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் குடும்பத்தின், தெலுங்கானாவைச் சேர்ந்த பாரத் ராஷ்ட்ரிய சங் தலைவர் கவிதா மற்றும் பலர் மீதும் இது போன்று வழக்குகள் பதிவு செய் யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. (ந.நி.)