states

இந்திய தயாரிப்பு இருமல் மருந்தை குடித்ததால் உஸ்பெக்கிஸ்தானில் 18 குழந்தைகள் பலி

புதுதில்லி, டிச.30- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியான தாக உஸ்பெக்கிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் (Marion Biotech) என்ற நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தான டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை குடித்ததால் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஆய்வகப் பரிசோதனையில், எத்திலின் கிளை கோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் உஸ்பெக்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரை யின்றி அதாவது பெற்றோர்கள் அல்லது பார்மா சிஸ்டுகளின் அறிவுறுத்தலில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. குழந்தைகளுக்கு நிலையான அளவை தாண்டி கொடுக்கப்பட்டு இருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 18 குழந்தைகள் உயிரிழப்பை தொடர்ந்து டாக்-1 மேக்ஸ் மாத்திரை கள் மற்றும் மருந்துகளை அனைத்து மருந்த கங்களிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக வும் உஸ்பெக்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேரியன் பயோ டெக் நிறுவனம் இந்தியாவில் டாக்-1 மேக்ஸ்-ஐ விற்பனை செய்யவில்லை,  உஸ்பெக்கிஸ்தா னுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளதாக  உத்தரப் பிரதேச அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருமல் மருந்தின் மாதிரிகள் நொய்டாவில் உள்ள உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப் பட்டு, சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரி சோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  

மேலும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), டிசம்பர் 27-ஆம் தேதி  முதல் இந்த விவகாரம் தொடர்பாக உஸ்பெக்கிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். மேரியான் பயோடெக் நிறுவனம் ஏற்றுமதி நோக்கத்திற்காக  மட்டுமே டாக்-1 மேக்ஸ் சிரப்பை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை உத்தரப்பிரதேசத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.  டாக்-1 மேக்ஸ் மருந்தால் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து பேசிய மேரியன் பயோடெக் நிறுவனத்தின் சட்ட ஆலோசர் ஹசன் ஹாரிஸ்,  “எங்கள்  நிறுவனத்தின் சோதனை முடிவில் எந்தப் பிரச்சனையும் இல்லை.  கடந்த பத்து ஆண்டுகளாக  மருந்துகளை உற்பத்தி செய்கிறோம். அரசின் அறிக்கை கிடைத்ததும். அதில் கூறப்பட்டுள்ளதை பரிசீலிப்போம். தற் போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது” என்றார். உஸ்பெக்கிஸ்தான் சம்பவத்திற்கு முன்ன தாக காம்பியாவில் 70 குழந்தைகள் இறந்ததற்கு ஹரியானாவை தளமாகக் கொண்ட மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த இருமல் மருந்துகள் காரணம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.