2022 ஜனவரி 13: ராஜஸ்தானின் பிகானிரில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்றுகொண்டிருந்த பிகானிர்-கவுஹாத்தி எக்ஸ்பிர ஸின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் இந்த விபத்து நடந்தது. இதில் ரயிலின் இன்ஜின் மோட்டார் திறந்து தண்ட வாளத்தில் விழுந்தது. அதன்மீது ரயில் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.
2017, ஆகஸ்ட்19 : உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் கத்தெளலியில் தடம் புரண்டன. இந்த ரயில், பூரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்றுகொண்டிருந்தது. இங்கு தண்டவாளத்தை அகற்றி சீரமைக்கும்பணி நடந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குப் பிறகு சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
2017, ஜனவரி 22: ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
2016, நவம்பர் 20: பாட்னா-இந்தூர் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் கான்பூர் அருகே புக்ராயனில் தடம் புரண்டன. இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரி ழந்தனர்.
2015, மார்ச் 20: டேராடூன்-வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்தது.
2014, ஜூலை 24: ஹைதராபாத் அருகே ரயில்வே கிராசிங்கில், பள்ளி பேருந்தும் ரயிலும் மோதியதில் குறைந்தது 15 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த னர். மேடக் மாவட்டம் மாசாய்பேட்டை பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து நடந்தது.
2014, மே 26: உத்தரப் பிரதேசத்தில் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள சுரேப் ரயில் நிலையம் அருகே கோரக்தாம் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதியதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.