states

img

தயார் நிலையில் கேரளா, தில்லி மாநிலங்கள்

தயார் நிலையில் கேரளா,  தில்லி மாநிலங்கள்

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

3 ஆண்டுகால இடைவெளிகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது.  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மகா ராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோன்று தில்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.  இதனால் தமிழ்நாடு, குஜராத் மாநி லங்களைத் தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட மாநில அரசுகள் பொது இடங்க ளில் கண்காணிப்பு மற்றும் மருத்துவ மனையில் சிறப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. கேரளா கேரளாவில் மே மாதத்தில் 273 கொ ரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் கண்காணிப்பினை அதி கரிக்கும்படி அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதே போல மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருமல் அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தில்லி தில்லியில் 23 கொரோனா பாதிப்பு கள் பதிவாகியுள்ளன. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பரிசோதனைக் கருவிகள், தடுப்பூசி களை மருத்துவமனைகள் தயார் நிலை யில் வைத்திருக்கும்படி தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போல மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் கொ ரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றாலும், தடுப்பூசிகள், பிபிஇ கருவி கள் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்க ளை தயார் நிலையில் வைத்திருக்கும் படி இரண்டு மாநில அரசுகளும் அறிவுறுத்தியுள்ளன.