பெங்களூரு, ஜூலை 5 - தமிழ்நாடு, கர்நாடகாவின் சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விஷ யத்திற்காகவும் சண்டை போட மாட்டோம் என்றும் கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத் துறை அமைச்சரு மான டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட் டம்- மேகதாது எனும் இடத்தில் காவிரி யின் குறுக்கே அணை கட்டுவது கர்நாடக அரசின் திட்டமாக உள்ளது. அவ்வாறு அணை கட்டினால், அது தமிழ்நாட்டு விவ சாயிகளைப் பாதிக்கும், காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 மாவட்டங்க ளின் விவசாயம் அழிந்து போகும் என்பது தமிழ்நாடு அரசின் அச்சமாக உள்ளது. எனினும், கர்நாடகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும், பாஜக, காங்கிரஸ் அரசுகள், மேகதாதுவில் அணை கட்டுவ தற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடு வதும், அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாக ஒன்றாகி விட்டது. அந்த வகையில்தான் அண்மையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது, மீண்டும் விவாதமா னது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பெங்களூரு வில் செவ்வாயன்று பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், அவர் கூறியிருப்ப தாவது: “தமிழ்நாடு, கர்நாடகத்தின் சகோதர மாநிலம். இங்கு (கர்நாடகம்) உள்ளவர் கள் அங்கு (தமிழ்நாடு) வேலை பார்க்கிறா ர்கள். அதுபோல் தமிழ்நாட்டை சேர்ந்த வர்கள் கர்நாடகாவில் வேலை பார்க்கி றார்கள். எனவே எந்த ஒரு விஷயத்திற்கா கவும் இரு மாநிலமும் சண்டையிடக் கூடாது. நேரம் கிடைக்கும்போது இரு மாநில அரசும் அமர்ந்து பேசி மேகதாது உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டுடன் நாங்கள் எந்த விஷயத்திலும் சண்டை போடத் தயாராக இல்லை. அவர்கள் எங்களின் சகோதரர்கள். லட்சக்கணக் கான மக்கள் ஓசூர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக அனைவரும் அமர்ந்து பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்”. இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.