வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல்
வாக்குத் திருட்டு குற்றச் சாட்டுக்கு இடையே உள் ளாட்சி தேர்தல் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணை யத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத் துள்ளது. கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள பரிந்துரை தொடர்பாக கூறுகையில்,”உள்ளாட்சித் தேர்தல் களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு களைப் பயன்படுத்த கர்நாடக அமைச்ச ரவை பரிந்துரைத்துள்ளது. மாநில தேர் தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும், தேவைப்பட்டால் திருத்த வும் அங்கீகாரம் அளித்துள்ளோம். ஏனெ னில் மக்களின் நம்பகத்தன்மையை மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அழித்துவிட்டது. தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெ டுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர பரிந்துரைத்துள் ளோம்” என அவர் கூறினார்.