புதுதில்லி, டிச. 17 - சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முகலாய மாமன்னர்களான அவு ரங்கசீப், ஷாஜகான் பற்றிய குறிப்புகளை நீக்கக் கோரி தொ டரப்பட்ட பொதுநல வழக்கை, தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. “முகலாய மாமன்னர்களான ஷாஜகானும், அவுரங்கசீப்பும், கோயில் சீரமைப்பு பணிகளுக்கு மானியம் வழங்கியதாக இடம் பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்பு களை நீக்க வேண்டும்” என்பது தான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்காகும். தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த நிலை யில்,
இந்த மனு, “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடியது” என்றும், “மனுதாரர் உடனே இதைத் திரும்ப பெற வேண்டும்” எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதைய டுத்து, மனுதாரரால் இந்தப் பொதுநல மனு திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக விசாரணை யின்போது, “ஷாஜகானும், அவு ரங்க சீப்பும் கோயில் சீரமைப்புப் பணிகளுக்கு மானியம் வழங்கும் கொள்கை கொண்டவர்கள் அல்ல என்பது மனுதாரரின் பிரச்சனையாக உள்ளது. எங்களால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தற்போ தைய கொள்கைகளையே தீர்மா னிக்க முடியவில்லை. அப்படியி ருக்கையில், ஷாஜகான் மற்றும் அவு ரங்கசீப்பின் கொள்கைகள் பற்றி நாங்கள் முடிவு செய்ய வேண்டுமா? அதை உயர் நீதிமன்றம் முடிவு செய்துவிட முடியுமா?” என்றும் காட் டமாக கேள்விகளை எழுப்பியுள்ள னர்.