அரசு வேகமாக செயல்பட்டு மீட்க ஜான் பிரிட்டாஸ் எம்.பி., வலியுறுத்தல்
கேரள செவிலியருக்கு ஜூலை 16 ஏமனில் மரண தண்டனை
சனா கேரளாவின் பாலக் காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 அன்று மரண தண்டனை நிறை வேற்ற காலக்கெடு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போதும் தாமதமில்லை அரசு விரைந்து செயல்பட்டு அவரை மீட்க வேண்டும் என சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எம்பி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க ருக்கு கடிதம் எழுதியுள்ளார். செவிலியர் பணிக்காக 2011 ஆம் ஆண்டு ஏமன் சென்ற நிமிஷா பிரியா ஏமன் நாட்டைச் சேர்ந்தவரான தலால் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் துவங்கினார். அவரால் நிமிஷா உடல் ரீதியாகவும், உள வியல் ரீதியாகவும் துன்புறுத்தப் பட்டுள்ளார். மேலும் நிமிஷாவின் ஆவணங்களை கைப்பற்றி வைத்துகொண்டு அவர் மிரட்டி வந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. இத னால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தப்பிக்க முயன்ற போது தலால் அப்டோ உயிரி ழந்துள்ளார். இது கொலை வழக்காக பதியப்பட்டு நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஜூலை 16 அன்று மரண தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. அவரை மீட்டுக் கொண்டு வர ஜான் பிரிட்டாஸ் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி வந்தார். நிமிஷாபிரியா வழக்கில் பாஜக அரசு போதுமான அளவு பதிலளிக்காதது குறித்து மாநி லங்களவையில் கடந்த பிப்ரவரி மாதமே அவர் பேசியதுடன், இந்த வழக்கில் முறையாக கவனம் செலுத்த வேண்டும் என பாஜக அரசாங்கத்தை கடுமை யாக எச்சரிக்கவும் செய்துள் ளார். இந்நிலையில் தான் இந்திய அரசு விரைந்து செயல் பட்டு அவரை மீட்க வேண்டும் என மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.