states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜேஎம்எம் எம்.பி., மஹுவா மாஜி

ஜார்க்கண்ட் மிகவும் பணக்கார மாநிலமாக இருக்க வேண்டியது. மாநிலத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. ஆனால் தற்போது 3 ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஒன்றிய அரசு ஜார்க்கண்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எங்கள் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.

திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. இது மிகவும் கவலை அளிக்கும் விவகாரம். எனவே பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

பீகார் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி லட்சக்கணக்கான இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க வைத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேண்டியது பீகார் அரசின் வெற்று பேச்சுகள் அல்ல, வேலைவாய்ப்புகள். அதனை தருவதற்கு, ஆட்சி மாற்றத்தின் தேவை உருவாகியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி., மிதுன் ரெட்டி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மக்களுடன் நிற்பவர்களை, அமைதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சதியே தவிர வேறில்லை. இது மோசடிகள், தோல்விகளை மறைக்க பாஜக - தெலுங்கு தேசத்தின் அரசியல் பழிவாங்கும் செயலாகும்.