ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் உடல்நலக் குறைவால் காலமானார்
ஜார்க்கண்ட் மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக் குறைவால் கால மானார். கடந்த சில வாரங் களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், ஆகஸ்ட் 2 அன்று தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த ராம்தாஸ் ஆகஸ்ட் 16 அன்று கால மானார். ராம்தாஸ் சோரனின் மறைவுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன், முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் மறைவையடுத்து அம்மாநி லத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப் படும் என்று ஜார்க்கண்ட் அரசு அறி வித்துள்ளது. இதனால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் படுவதாகவும் ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.