states

img

‘அக்னி பாதை’ போராட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

பாட்னா, ஜூன் 20- ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் மோடி அரசின் ‘அக்னி பாதை’ திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.  இப்போராட்டம் முதலில் பீகா ரில்தான் வெடித்தது. அங்குள்ள இளைஞர்கள் ரயில்களையும், பாஜக அலுவலகங்களையும் எரித்துப் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல் லாமல், பாஜக-வைச் சேர்ந்த பீகார் துணை முதல்வர் ரேணு தேவி, பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகி யோரின் வீட்டை அடித்து நொறுக்கி னர். பாஜக எம்எல்ஏ சி.என். குப்தாவின் வீடு சூறையாடப்பட்டது. வாசிசாலி கஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ அரு ணாதேவி காரில் சென்றபோது தாக் கப்பட்டார். பாஜக கூட்டணியில் இருந்த போதும் அக்னி பாதை திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்ததால், அவரது கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. 

இந்நிலையில், தங்கள் மீதான தாக்குதலை முதல்வர் நிதிஷ்குமார் தடுத்து நிறுத்தவில்லை என்று பாஜக தலைவர்கள் தற்போது கூப்பாடு போடத் துவங்கியுள்ளனர். “நாங்கள் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஆனால் இது போன்ற சம்பவம் நாட்டில் எங்கும் நடக்கவில்லை. பீகாரில் மட்டும்தான் நடக்கிறது. பாஜக-வின் தலைவர் என்ற முறையில், இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இதை தடுக்க வில்லை என்றால், இது யாருக்கும் நல்லதல்ல!” என பாஜக தலைவர்  சஞ்சய் ஜெய்ஸ்வால், முதல்வர் நிதிஷ் குமாரை மறைமுகமாக மிரட்டினார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் என்கிற லாலன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.  “ஒன்றிய அரசு ஒரு முடிவை  எடுத்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். எனவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முன்வந்  தனர். நிச்சயமாக வன்முறை அல்ல.  வன்முறையை ஏற்க முடியாது. ஆனால் அந்த இளைஞர்களை கவ லையடைய செய்வதையும், அவர் களது கவலைகளையும் பாஜக கேட்க  வேண்டும். மாறாக, நிர்வாகத்தின் மீது  பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த திட்  டத்துக்கு எதிராக பாஜக ஆளும் மாநி லங்களிலும் போராட்டங்கள் நடக்கின் றன. பாஜக ஆளும் மாநிலங்களில் பாதுகாப்புப் படையினரின் செயலற்ற தன்மை குறித்து ஜெய்ஸ்வால் ஏன்  பேசவில்லை?” என்று ராஜீவ் ரஞ்சன்  கேள்வி எழுப்பியுள்ளார்.