புதுதில்லி, ஆக.6- இந்தியாவின் 16-ஆவது குடியரசுத் துணைத்தலைவராக ஜகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்கரெட் ஆல்வா வைக் காட்டிலும் வாக்குகள் அதிக மாக பெற்ற நிலையில், அவர் குடிய ரசுத் துணைத் தலைவராக தேர்வானார். வெற்றிபெற்ற அவருக்கு பிரத மர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆளும் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக் களை தெரிவித்து வருகின்றனர். தற்போது, குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவு அடை வதையொட்டி, புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் அறிவிப்பு, கடந்த ஜூலை 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 19 வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக ராஜஸ் தான் முன்னாள் ஆளுநர் மார்க்கரெட் ஆல்வாவும் (80) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இருவருமே தங்களுக்கான ஆத ரவைத் திரட்டி வந்த நிலையில், அறி வித்தபடி ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளா கத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் வாக்குப் பதிவு துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் நப ராக தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து பிற எம்.பி.க்கள் வாக்களித்தனர். உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்றுவரும் முன் னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்க ளித்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங், பாஜக எம்.பி.யும் கட்சியின் தலைவருமான ஜெ.பி. நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்டோ ரும் வாக்குகளைப் பதிவு செய்தனர். எதிர்க்கட்சித் தரப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனி மொழி, திருச்சி சிவா, வைகோ, பரூக் அப்துல்லா, கார்த்தி சிதம்பரம், தயா நிதி மாறன் உள்ளிட்டோர் வாக்களித்த னர். விளையாட்டு வீராங்கனை பி.டி. உஷா உள்ளிட்ட நியமன எம்.பி.க்க ளும் முதன்முறையாக வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் அமைக்கப் பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நட ராஜன், சு.வெங்கடேசன், வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் மக்களவை உறுப்பினர் கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பி னர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றி ருந்த நிலையில், மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு முடிந்து. இந்த வாக்கு கள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு களும் அறிவிக்கப்பட்டன. பாஜகவிற்கு மக்களவையில் 303, மாநிலங்களவையில் 91 என மொத் தம் 394 எம்.பி.-க்களின் ஆதரவும், இவை தவிர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இருந்ததால், 50 சதவிகி தத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜகதீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், 23 எம்.பி.க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, குடி யரசுத் துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கெ னவே அறிவித்து விட்டதும், ஜகதீப் தன்கருக்கு சாதகமாக மாறியது. காங்கிரஸ், இடதுசாரிகள், தேசிய வாத காங்கிரஸ், திமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி கள் மார்க்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், 200-க்கும் அதிகமான வாக்குகளை ஆல்வா பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் அதிகாரி உத் பால் குமார் சிங் முடிவை வெளியிட்ட போது, பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்று, நாட் டின் 16-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய குடியரசுத் துணைத்தலை வர் ஜகதீப் தன்கர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள் கிறார்.