states

img

ராகுல் காந்தி டுவிட்டரில் கேள்வி 42 சதவிகித இளைஞர்களுக்கு நாட்டில் வேலையில்லை...

புதுதில்லி, செப்.10- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரத்திற்கான 150 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியா குமரி மாவட்டத்தில், நடைபயணத்தைத் துவங்கிய அவர், சனிக்கிழமையன்று 4-ஆவது நாளாக பயணத்தைத் தொ டர்ந்தார். அந்த வகையில், தனது நான்காம் நாள் ‘இந்திய ஒற்றுமை’ நடைப்பயண புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, கருத்து ஒன்றையும் பதி விட்டுள்ளார். அதில், “நாட்டில் உள்ள இளைஞர்க ளில் 42 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்; பாரதத்தின் எதிர்காலம் பாது காப்பாகத்தான் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “தனது எதிா்கா லம் என்னவாக இருக்கும் என்ற முன் னோக்கிய பார்வை இல்லாத நிலையை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. விவ சாயிகள் அல்லது குறு, சிறு, நடுத்தர நிறு வனங்கள் என எவருக்கு எதிராக அநியா யம் நிகழ்ந்தாலும், அதற்குக் காங்கிரஸ் எதிரானது. நியாயம் மேலோங்குவதை உறுதி செய்ய காங்கிரஸ் பாடுபடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று 3-ஆம் நாள் பயணத்தின் போது செய்தி யாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக ளுக்கும் நேரடியாக பதிலளித்தார். அப்போது, “அரசியல் சாசன அமைப்பு களை பாஜக கைப்பற்றி விட்டது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே நடைபயணம். இந்த நாட்டில் தற்போது சில தொழிலதி பர்கள்தான் வாழ்கிறார்கள். உலகின் 3-ஆவது இடத்துக்கு ஒருவர் வந்து விட்டார். ஆனால் ஒரு பக்கம் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்ந்துள்ளது. இது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. நாட்டில் மக்களுக்கு இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேலும், “இது ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான பயணம் அல்ல. சித்தாந்த ரீதி யான போராட்டம். நாட்டில் பன்முகத் தன்மையை முன்வைப்பது ஒரு சித் தாந்தம். அனைத்தையும் ஒற்றைத் தன்மை யாக்க முயல்வது மற்றொரு சித்தாந்தம். இந்த இரு சித்தாந்தத்திற்கும் இடையே மோதல் இருக்கிறது. இந்த மோதல் எளி தில் முடிவுக்கு வந்து விடாது” என்றார். “காங்கிரசில் 2-ஆம் கட்ட தலை வர்கள் தலைமைக்கு எதிராக இருக்கிறார் கள். சிலர் விலகுகிறார்கள்... அவர்களி டம் நீங்கள் பேசினீர்களா?” என்று செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்சியை விட்டு வெளியேறுபவர்களை நான் ஏன் சாமாதானம் செய்யவில்லை? என்றால், அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதில் என்னை விட பாஜக சிறந்த வழியைக் கொண்டுள்ளது. 

பாஜக-வின் வழிமுறை என்ன என்பது உங்களுக்கு தெரியும். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் கையில் வைத்துக் கொண்டு பாஜக மிரட்டு கிறது. அழுத்தம் கொடுக்கிறது. அந்த  அழுத்தத்தை எதிர் கொள்ள முடியாதவர்க ள், பாஜகவை அனுசரிக்க எண்ணுகிறார் கள். பாஜகவுடன் சமாதானம் செய்வது எளிது, அவர்களுக்கு முன்னால் கைகளை கூப்பினால் அவர்கள் வாழ்க்கை எளி தாகிவிடும். துரதிர்ஷ்டவசமாக, இது  எனது நடைமுறை அல்ல. இது என்னு டைய குணம் அல்ல. போராடுவதே என்னுடைய குணம்.  இது எளிதான போராட்டம் அல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உட்பட அனை வரும் புரிந்தே இருக்கிறோம். இந்த நேரத்தில், ஊடகங்கள் எதிர்க்கட்சிக ளுடன் இல்லை… நீங்கள் இருக்க விரும்பா ததால் அல்ல. உண்மையில், நீங்களும் அழுத்தத்தில் இருக்கிறீர்கள். உங்கள் உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட உறவுகளில் உள்ளனர். எனவே இது எளிதான போராட்டம் அல்ல. அதனால் பலர் போராடவே விரும்பவில்லை. எங்கேயோ சிக்கிக்கொண்டோம் என்று நிறைய பேர் உணர்கிறார்கள்.  இப்போது போராட்டம் என்பது ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையே இல்லை. மாறாக, இந்தியாவின் கட்டமைப்பை சீர் குலைப்பவர்களுக்கும், அதை காப்பாற்ற நினைப்பவர்களுக்குமான போராட்டமாக மாறியிருக்கிறது” என்று ராகுல் பதில ளித்துள்ளார்.

காங்கிஸ் கட்சியின் தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்ற காங்கிரஸ் யாத்திரைக்கு தலைமை வகித்துச் செல்வது முரண்பாடாக இல்லையா? என்ற கேள்விக்கும் ராகுல் காந்தி விடையளித்துள்ளார். “கட்சியின் தேர்தல் வரும்போதுதான் நான் தலைவர் ஆவேனா இல்லையா என்பது தெரிய வரும். நான் தலைவர் பத விக்கான தேர்தலில் நிற்கவில்லை என்றால், நீங்கள் ஏன் நிற்கவில்லை என்று கேட்கலாம், அதன் பிறகு நான் அந்த கேள்விக்கு பதிலளிக்கிறேன். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கும்போது எல்லாம் தெளிவாகிவிடும். நான் எனது முடிவுகளை மிகத் தெளிவாக எடுத்து விட்டேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.  எனவே தேர்தல் வரும் வரை பொறுத்தி ருங்கள். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு. கட்சி உறுப்பினர் என்ற முறையிலேயே யாத்திரை செல்கிறேன். காங்கிரஸ் கட்சி யிலும் சரி, நடைபயணத்திலும் சரி எந்த முரண்பாடும் இல்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

;