states

img

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 

அலுவல் விபரங்கள்  வெளியீடு

ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நாடாளு மன்ற கூட்டத்தொடருக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தனித்தனியே அலுவலக நாட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. அதன்படி ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடர் 21 அமர்வுகளாக ஆகஸ்ட் 21ஆம் தேதி  வரை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளும் செயல்படாது என அதிகாரப்பூர்வ அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.