states

img

இன்னும் நூறாண்டுகளா?

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய், இன்று பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்ற காலம் வந்துவிட்டது. என்னதான் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால் பதித்தாலும், பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் சமத்துவமாக கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலக பெண்கள் சமத்துவ தினமாக கடைப்பிடிக்க ப்படுகிறது. பெண்களுக்கான அனைத்து உரிமை களும் ஆண்களுக்கு நிகராக கிடைக்க வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. 1920 ஆகஸ்ட் 26 அன்று அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையிலும், ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள் என்பதை வலி யுறுத்தும் வகையிலும், ஆக.26 ஆம் தேதி  “பெண்கள் சமத்துவ தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவே பின்னாளில் உலகம் முழுவதும், இதற்கென பிரத்யேகமாக ஒரு நாளை கடைப் பிடிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. ஓட்டுப் போடுவதினால் மட்டுமே பெண்களுக்கான சமத்து வம் கிடைத்து விடுவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இதுகுறித்து உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) 2014 இல் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘உலகில்  ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட நாம் 2095 வரை  காத்திருக்க வேண்டுமென’ தெரிவித்தது. மேலும், 2015 இல் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், மக்க ளிடையே நிலவி வரும் மந்தநிலை மற்றும் பாலின சமத்துவத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், ‘2133 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பாலின சமத்து வத்தை நாம் உணர முடியும்’ என குறிப்பிட்டுள் ளது. பெண்களுக்கான சமத்துவம் கிடைக்க நாம் இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்தியாவில், அனைத்துப் பெண்களும் வாக்களிப்பதற்கான உரிமை 1951 இல் வழங்கப் பட்டது.  ஆனால், சென்னை மாகாணத்தில் சொத்துள்ள (நிலம்) பெண்களுக்கு 1921 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகிலேயே முதன் முறையாக, நியூசிலாந்து நாடு 1893 இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.