states

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது

புதுதில்லி, செப்.8- இந்தியாவின் அந்நியச் செலாவணி அல்லது அந்நி யச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் 3 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி யின் (ஆர்பிஐ) வாராந்திர துணைத் தரவுகளின்படி, ஆகஸ்ட் 26-ஆம் தேதியு டன் முடிவடைந்த வாரத்தில்  நாட்டின் அந்நியச் செலா வணி கையிருப்பு 3 பில்லி யன் டாலர் குறைந்து, 561.046 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய வாரத்தில் 564.053 பில்லி யன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நான் காவது வாரமாக வீழ்ச்சிய டைந்து வருகிறது. பிப்ரவரி யில் உக்ரைன் - ரஷ்யா மோதல் வெடித்ததில் இருந்து, இதுவரை இந்தியாவின் அந்நி யச் செலாவணி கையிருப்பு 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. மேலும் அக்டோபர் 2021 முதல் 80 பில்லியன் டாலருக்கும் மேலாக சரிந்துள்ளன. 1 பில் லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஆகும்.