புதுதில்லி,டிச.6- இந்தியா-ரஷ்யா இடையே ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ரூ.5,200 கோடிக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் டிசம்பர் 6 திங்களன்று கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் பங்கேற்ற இரு நாடுகள் இடையே யான 21-வது உச்சி மாநாடு தில்லி யில் டிசம்பர் 6 அன்று நடை பெற்றது. இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தை யின்போது இந்தியா-ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரஷ்ய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கி களை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. 6 லட்சத்து ஆயிரத்து 427 ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது. 2031 வரை 10 ஆண்டு களுக்கு ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரஷ்ய தொழில்நுட்ப உதவி யுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.
ஏ.கே. 203 ரக துப்பாக்கியை வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய சிறு ஆயுதங்கள் தொகுப்பு விடைபெறவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வாங்க வுள்ள ஏ.கே.203 ரக துப்பாக்கி வாயு மூலம் இயங்கக்கூடியது. முந்தைய கேட்ரிட்ஜை விட, அதாவது துப்பாக்கி தோட்டாக் களில் இருக்கும் வெடி மருந்துகள் இதில் அதிகமாக இருக்கும். ஏ.கே. 203 ரக துப்பாக்கி ஆரம்பத்தில் ஏ.கே.103எம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் அதனை ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ் மேம்படுத்தி னார்.