ளுக்கு அளித்த வாக்கு றுதிகளை ஒன்றிய அரசு நிறை வேற்றவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை துவங்குவோம் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள் ளது. கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட் டத்திற்கு பணிந்து மோடி அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. இதையடுத்து தில்லியின் காஜிபூர் எல்லையில் 378 நாட்களுக்காக அமைக் கப்பட்டிருந்த தற்காலிக தங்குமிடங்க ளை விவசாயிகள் அகற்றினர். இந்த போராட்டம் குறித்து கஜேந் திர சிங் என்பவர் கூறுகையில், “விவசாயிகள் போராட்டத்தில் பிரச்ச னைகளை எவ்வாறு எதிர்கொள்வது, கையாள்வது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். நாங்கள் பயங்கர வாதிகள், சீர்குலைவு சக்திகள் என்று அழைக்கப்பட்டோம். தொடர் போராட் டத்தின் மூலம் விவசாயிகளைக் காப்பாற்ற முடிந்தது. போராடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது” என்றார்.
கஜ்ராம் என்பவர் கூறுகையில் “மோடி அரசின் நடவடிக்கை மனதை விட்டு அகலாது. ஒரு மாதத்தில் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டிருக்கலாம். இப்போது, ஓராண்டுக்குப் பிறகு, சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளதால் மோடி அர சாங்கத்தைப் பற்றிய நமது எண் ணத்தை மாற்றப் போவதில்லை. போராட்டக்களத்தில் ஒவ்வொரு சிறு-குறு விவசாயியும் ஒரு வருட காலத்தில் சராசரியாக 35,000-40,000 ரூபாய் வரை செலவழித்துள்ளனர்”. உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா வா மாவட்டத்தில் உள்ள அவுரியா வைச் சேர்ந்த கந்தர்வ் சிங் கூறுகை யில், “எல்லையில் எட்டு மாதங்கள் கழித்துள்ளேன். ஒன்றிய அரசு மதத்தை வணிகமயமாக்குவதிலிருந்து விலகி வேலை ரீதியிலான வணிகத்தை தொடங்க வேண்டும். பணவீக்கம், விவ சாயிகளை தொடர்ந்து பாதிக்கிறது. விவசாயிகளை நசுக்குவதற்கு காரண மான ஒரு அமைச்சரை அரசாங்கம் தொடர்ந்து காப்பாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வருட வலியை மறக்கவில்லை
கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் அனுபவித்த வலியை மறக்கவில்லை. எங்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்றார். ஜனவரி 15 ஆம் தேதி விவசாயி கள் ஒன்றுகூடி ஆய்வுக் கூட்டம் நடத்த வுள்ளனர். “அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தை மீண்டும் தொடங்கு வோம் என்று சம்யுக்த கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியில்லை
“நான் எந்த தேர்தலிலும் போட்டி யிடப் போவதில்லை, எந்த அரசியல் கட்சியும் என் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ தங்கள் போஸ்டர் களில் பயன்படுத்தக்கூடாது” என்று பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.