states

மாணவிகளை இழிவுபடுத்திய ஐஏஎஸ் அதிகாரி

பாட்னா, செப்.29- அரசாங்கம், மலிவுவிலை நாப்கின்களை வழங்க வேண்  டும் என கோரிக்கை விடுத்த மாணவியிடம், அடுத்ததாக ஆணு றைகளையும் இலவசமாக வழங்க வேண்டுமா? என்று கேலி செய்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் அரசு ‘சஷக்த் பேட்டி,  சம்ரித் பீகார்’ (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பெண்களின் மதிப்பை உயர்த்துவதை நோக்கி’ என்ற கருத்தரங்கம், யுனிசெப் உள்ளிட்ட அமைப்பு களுடன் இணைந்து கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் ரியா குமாரி என்ற மாணவி ஒருவர்,  “எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசி யம் இருக்காது” என கூறியுள்ளார். “அரசு நிறைய இல வசங்களை அளித்து வருகிறது. அந்த இலவசங்களில் ஒன்றாக, ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்க ளுக்கு அவர்கள் வழங்க முடியாதா, என்ன?” என்றும் அவர் வினவியுள்ளார். அப்போது, கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா, நாப்கின் கோரிக்கை விடுத்த மாணவிக்கு அநாகரிகமான முறையில் பதிலளித்துள்ளார். “உங்களின் (மாணவியின்) இந்த கோரிக்கைகளுக்கு வரம்பு இருக்கிறதா, 20-30 ரூபாய்க்கு விஸ்பர் கொடுக்க வேண்டும், நாளை ஜீன்ஸ் மற்றும் அழகான காலணி களைக் கேட்பீர்கள், கடைசியாக, குடும்பக் கட்டுப்பாடு என்று  வரும்போது, ஆணுறைகளும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்பீர்கள் இல்லையா...?” என்று கேலி செய்துள் ளார்.

ஆனாலும், இந்த பதிலால் நொறுங்கி விடாத மாணவி ரியா குமாரி, “மக்களின் வாக்குகள்தான் அரசாங்கத்தை உரு வாக்குகின்றன” என்று கூற, அப்போதும் அடங்காத ஐஏஎஸ்  அதிகாரி, “இது முட்டாள்தனத்தின் உச்சம். ஓட்டு போடாமல்  இருங்கள், பாகிஸ்தான் போல ஆகுங்கள்” என்று கடுமை  காட்டியுள்ளார். மேலும், “பணத்திற்காகவும் சேவைக்காக வும்தான் வாக்களிக்கிறீர்களா?” என்றும் கேட்ட அவர், “எல்லாவற்றுக்கும் அரசை நம்பி இருக்கக் கூடாது” என்றும்  ‘அறிவுரை’ வழங்கியுள்ளார். மற்றொரு மாணவி தனது பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறையின் பாழடைந்த நிலை குறித்தும், சிறுவர்களும் (ஆண்களும்) கழிவறைக்குள் நுழைந்து விடுவது பற்றியும் அதிகாரியிடம் தெரிவித்தபோது, பாம்ரா, “உங்கள் அனை வருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளதா? நீங்கள் வெவ்வேறு இடங்களில் பல விஷயங்களைக் கேட்டால் அது  எப்படி நிறைவேறும்?” என்று அந்த சிறுமியையும் அதிகாரி பாம்ரா கேலி செய்துள்ளார்.

அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ராவுக்கும், மாணவிக்கும்  இடையிலான இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக  வலைத்தளங்களில் வெளியாகவே, பலரும் அதிகாரி பாம்ரா வுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனிடையே, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹர்ஜோத் கவுர் பாம்ரா, “பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற் காக கடுமையாக போராடிய நபர்களில் ஒருவர் என அறி யப்படும் பெண் நான். சில தவறான நபர்கள், என்னுடைய  நன்மதிப்புகளை சீர்குலைக்கும் கீழ்த்தர முயற்சிகளில் இது போன்று ஈடுபட்டு வருகின்றனர்” என்று சமாளித்தார். இந்நிலையில், மிகவும் உணர்ச்சியற்ற வகையில் ‘ஆணுறை’ கருத்து தெரிவித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். “உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளேன். ஒவ்வொன்றையும் கண்கா ணித்து வருகிறேன். நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்குமாகவே கேள்வி கேட்டேன்

இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்வி கேட்ட மாணவி ரியா குமாரியும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது கேள்வி தவறாகவோ, பெரிய விஷயமாவோ இல்லை. என்னால் நாப்கின் வாங்க முடியும். ஆனால் சேரி களில் வாழும் பலரால் அவற்றை வாங்க முடியாது. நான்  எனக்காக மட்டுமல்ல, எல்லா பெண்களுக்காகவும் கேள்வி  கேட்டேன். எங்கள் கவலையை வைத்து கோரிக்கையுடன் விவாதம் செய்யவே அங்கு சென்றோம்” என அவர் குறிப்  பிட்டுள்ளார்.
 

;