ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக உண்மையை உரத்துப் பேசும் பத்திரிகை யாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பிரபலமான ஊடக இணையதளமான நியூஸ் க்ளிக் மீது மோடி அரசு இன்றைக்கு நடத்தியுள்ள தாக்குதலுக்கு எதிராக ஒன்றுபட்டு உரத்து குரல் எழுப்புவோம். ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மோடி அரசு இத்தகைய கோழைத்தன மான, எதேச்சதிகாரமான தாக்குதல்களை தனது அதிகாரத்திற்கு எதிராக பேசும் ஊடகங்கள் மீது ஏவுகிறதே தவிர, நாட்டின் வன்முறையையும், வெறுப்பையும் விதைக்கிற,அதற்கு ஆதரவாக எழுதுகிற சில ஊடகங்களை போற்றி பாதுகாத்து வருகிறது.