கோட்டயம், ஜுன் 8- தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சொப்னா சுரேஷை பலமுறை சந்தித்த தாக பி.சி.ஜார்ஜ் கூறியுள்ளார். சொப்னாவை பத்தொன்பது முறை அல்ல, அதைவிட அதிக முறை சொப்னாவுடன் தொலைபேசியில் பேசியிருப்ப தாகவும் ஆனால், கோட்டயத்தில் சதித்திட்டம் ஏதும் நடை பெறவில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் பிசி ஜார்ஜ் தெரிவித்தார். தன்னிடம் பல தொலைபேசிகள் இருப்பதாகவும், சொப்னா தொலைபேசியிலும் நேரிலும் பலமுறை பேசியதாக வும் ஜார்ஜ் கூறினார். பி.சி.ஜார்ஜ் மற்றும் சரிதா நாயருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை செய்தி ஊடகம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த பி.சி.ஜார்ஜ், தைக்காடு விருந்தினர் மாளிகை யில் சொப்னாவை சந்தித்ததாக கூறினார். அனைத்து தகவல்களும் சொப்னா எழுதியது என்று கூறி இரண்டு பக்கங்களும், மூன்று பக்கங்களும் கொண்ட 2 குறிப்புகளையும் செய்தியாளர்களிடம் வழங்கினார். சொப்னா பிடிபடுவதற்கு முன்பு வளைகுடாவில் இருந்து 21 முறை தங்கம் கடத்தி வந்ததாக தன்னிடம் சொப்னா கூறியதாகவும் பிசி ஜார்ஜ் கூறினார். சொப்னாவுடன் பேசுவது பெரிய விஷயமல்ல. சரிதாவிடம் பல வருடங்களாக பேசி வருகிறேன். சரிதாவை ஒரு குழந்தையைப்போல் தான் பார்ப்பதாகவும். சரிதாவை சர்க்கரை குழந்தையே (சக்கரக் கொச்சே) என்று அழைப்பது வழக்கம் எனவும் பி.சி.ஜார்ஜ் தெரிவித்தார். தங்க கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஒரு நாள் தன்னை சிறையில் வைத்த பினராயி விஜயனை 14 நாட்கள் சிறையில் அடைத்தாலும் தீர்வு கிடைக்காது என பிசி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.