states

img

உ.பி.,யில் கேஎப்சி உணவகத்தை மூடிய இந்துத்துவா குண்டர்கள்

உ.பி.,யில் கேஎப்சி உணவகத்தை மூடிய இந்துத்துவா குண்டர்கள்

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் காசியா பாத்தில் உள்ளது கேஎப்சி உணவகம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அசைவ உணவகமான, கேஎப்சி உணவ கத்திற்குள் வெள்ளியன்று காலை “இந்து ரக்ஷா தளம்” அமைப்பைச் சேர்ந்த வர்கள் நுழைந்து, இந்து நாள்காட்டி யின் ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎப்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி கடையை மூடச் செய்துள்ளனர். இதே போன்று அருகில் உள்ள தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா குண்டர்கள் மூட வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி இந்துத்துவா குண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.