புதுதில்லி, டிச.15- நாட்டின் மொத்த விலைப் பண வீக்கம் (Wholesale Prices Inflation - WPI), 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2021 நவம்ப ரில் 14.23 சதவிகிதமாக அதிக ரித்துள்ளது. ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்ச கமே இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் - அதற்கு முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலைப் பணவீக்கம் அதிகபட்ச மாக 12.54 சதவிகிதமாக உயர்ந் தது. தற்போது அதைக்காட்டிலும் மொத்த விலைப் பணவீக்கம் ஒரே மாதத்தில் 2.73 சதவிகிதம் அதிகரித்து, நவம்பரில் 14.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மொத்த விலைப்பணவீக்கம் 12 ஆண்டு களில் இல்லாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது.
பெட்ரோலியம், இயற்கை எரி வாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனம், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதி கரிப்பே மொத்தவிலைப் பண வீக்கம் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளன. குறிப்பாக, உணவுப் பொருட் கள் பணவீக்கத்தை, கடந்த 2020 நவம்பருடன் ஒப்பிடும்போது, 2021 நவம்பரில் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. மேலும், அடிப்படை உணவுப் பொருட்கள் பணவீக்க அதிகரிப்பானது, கடந்த 13 மாதங்களில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது.
உணவுப் பொருட்களுக்குள், முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் அக்டோபரில் 1.98 சதவிகிதத்தில் இருந்து நவம்பரில் 9.66 சத விகிதமாகவும், பழங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு 8.2 சதவிகித மாக இருந்தது நவம்பரில் 15.5 சதவிகிதமாகவும், கோதுமை விலைகள் அக்டோபரில் 8.14 சத விகிதத்திலிருந்து 10.14 சத விகிதமாகவும் உயர்ந்துள்ளன. உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலைகள் அக் டோபரில் 3.06 சதவிகிதமாக இருந்த நிலையில், நவம்பரில் அது 6.7 சதவிகிதமாகவும், கச்சா பெட்ரோலியப் பணவீக்கம் அக்டோபரில் 80.57 சதவிகிதத்திலி ருந்து 91.74 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறி யீடு (Consumer price index - CPI) அடிப்படையிலான சில்லரை விலைப் பணவீக்கமும் நவம்ப ரில் 4.91 சதவிகிதமாக உயர்ந்துள் ளது குறிப்பிடத்தக்கது.