states

img

தனக்கு வாக்களிக்காதவர்களை செருப்பால் அடிப்பாராம்..!

சண்டிகர், மார்ச் 18 - ஹரியானா மாநிலம், சண்டிகர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் கிரோன் கெர். 2019-ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறை யாக வெற்றிபெற்று எம்.பி.யாக இருக்கும் கிரோன் கெர், புதனன்று (மார்ச் 15)  கிஷன்கர் பகுதி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், கிஷன்கர் பகுதிக்கு உட்பட்ட தீப் காம்ப்ளக்ஸ் குடியிருப்பு பகுதி வாக்காளர்களைப் பற்றிப் பேசும்போது “அவ மானம்” மற்றும் “செருப்பால் அடிக்க வேண்டும்” என்பன போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளார். அதாவது, தீப் காம்ப்ளெக்ஸில் உள்ள வர்களுக்காக, சாலை உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை தான் செய்துள்ளதாகவும், ஆனால், “தீப் காம்ப்ள க்ஸில் ஒருவர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை, அது மிகவும் வெட்கக்கேடானது… அவர்களை செருப் பால் அடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  இது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிதோடு, அவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களிலும் வெளியாகி தற்போது பலரின் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

“வாக்காளர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சண்டிகர் தொகுதி பாஜக எம்.பி. பேசியது வருத்தமளிக்கிறது; சாலைகள் அமைக்க பணம் கொடுத்ததாக கிரோன் கெர் பேசியுள்ளார்; ஆனால், இந்தப் பணத்தை அவர் தனது பாக்கெட்டில் இருந்து கொடுத்தாரா, என்ன?; எனவே, அவர் இதுபோன்று தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என சண்டிகர் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தீபா துபே கண்டனம் தெரி வித்துள்ளார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரதீப் சாப்ரா, “தீப் காம்ப்ளெக்ஸில் ரூ. 1 கோடி மதிப்பிலான சாலைகள் கட்டப்பட்டுள் ளதாக கிரோன் கெர் கூறியுள்ளார். அதற்காக வாக்காளர்களை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை” என்று கண்டித்துள்ளார். இதனிடையே, வாக்காளர்களை செருப்பால் அடிப்பேன் என்று பேசிய பாஜக எம்பி-க்கு காலணிகளை அனுப்பிவைக்கப் போவதாகவும், முடிந்தால் வாக்காளர்களை அவர் செருப்பால் அடிக்கட்டும் என்றும் காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் அறிவித்துள்ளனர். கிரோன் கெர், பாஜக-வைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

;