புதுதில்லி, டிச.1- திருமணத்தின் போது, மணமக்களுக்கு வழங்கும் பரிசுகளை ‘பெட்ரோல் மற்றும் டீசல் போட்டுக் கொள்வதற்கான எரிபொருள் கூப்பன்களாக அளியுங்கள்’ என, இந்தியன் ஆயில் நிறுவனம் (Indian Oil Corporation) நூதன விளம்பரத்தில் இறங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் ‘ஒன் பார் யு’ (one4u) என, அழைக் கப்படும் பரிசுத் திட்டத்தை தீபாவளிக்கு அறிமுகப் படுத்தியது. அதாவது, ரூ. 500 முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான எரிபொருள் கூப்பன் களை வெளியிட்டு, இந்தக் கூப்பன்களை, நண்பர் களுக்கு தீபாவளி பரிசாக வழங்கலாம் என்று இந்தி யன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. இந்த பரிசுக் கூப்பனை பெறும் நண்பர்கள், அவற்றை வைத்து தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக் கொள்வார்கள்.
அதன்மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதுதான் இதன் திட்டமாகும். தற்போது தீபாவளி கடந்துவிட்ட நிலையில், உற வினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணங்களுக் கும் இந்த எரிபொருள் கூப்பனை பரிசாக வழங்கு மாறு புதிய விளம்பரத்தை இந்தியன் ஆயில் நிறு வனம் செய்துள்ளது. “உங்கள் அன்புக்குரியவர்களின் புதிய துவக்கங் களை மிகச் சிறப்பானதாக மாற்றுங்கள். திருமணங்க ளைக் கொண்டாட சிறந்த பரிசாக இந்தியன் ஆயில் நிறுவன எரிபொருள் கூப்பன் உள்ளது. அவற்றை ‘ஆன்லைன்’ வாயிலாக பெற்று உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் அனைவருக்கும் பரிச ளியுங்கள்” என்று தனது சமூக வலைதளத்தில் இந்தி யன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. இதன்படி https://one4u.easyfuel.in/ என்ற இணையதளத்தில் சென்று, எந்தத் தொகைக்கும் எரி பொருள் பரிசுக் கூப்பனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசுக் கூப்பனைக் கொண்டு ஒருவர் நாட்டி லுள்ள எந்தவொரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிலும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித் துள்ளது.