states

img

மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

சண்டிகர், அக். 14 - மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது, வெறிக்கூட்டம் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்திய  சம்பவம் ஹரி யானா மாநிலம் குர்கானில் நிகழ்ந்துள்ளது. மேலும், அந்தக் கூட்டம் மசூதியை யும் அடித்து நொறுக்கிச் சூறையாடி யுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு குர்கான் நகரிலுள்ள போரா காலன் என்ற இடத்தில் 4 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், வியாழனன்று மாலை, வழக்கம்போல போரா காலன் பகுதி இஸ்லாமியக் குடும்பங்கள் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று மசூதிக்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரு கூட்டம், தொழுகையில் இருந்த இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், மசூதி மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளது. இஸ்லாமியர்களை மசூதிக்குள்ளேயே வைத்து கதவைப் பூட்டி விட்டும் சென்றுள்ளது.

இதில், படுகாயம் அடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்  சார்பில் சுபேதார் நாசர் முகமது என்பவர் புகார் அளித்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ  (வேண்டுமென்றே மத நம்பிக்கை களை சீர்குலைத்தல்), 323 (காயப் படுத்துதல்), 506 (குற்றம் புரிதல்),  147 (கலவரம்), 148 (ஆயுதங்களை ஏந்தி கலவரம் செய்தல்) உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் 12-க்கும் மேற்பட்ட வர்கள் மீது பிலாஸ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போரா காலன் பகுதியில் வசிக்கும் 4  இஸ்லாமியக் குடும்பங்களை, அந்த பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வரு வதாகவும், அதனொரு பகுதியாகவே இஸ்லாமியர்களை அச்சுறுத்தி அவர் களை காலி செய்ய வைப்பதற்கு  இந்த தாக்குதலை அரங்கேற்றி யிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்பவே தாக்குதலின் போது, போரா காலன் பகுதியை  காலிசெய்து விட்டு வெளியேறா விட்டால் உயிரோடு இருக்க மாட்டீர்கள்  என்று, தாக்குதல் நடத்திய கும்பல் கொலை மிரட்டல் விடுத்து, மசூதியை யும் சூறையாடியுள்ளது.