states

img

சாதாரண மக்களுக்கு செல்லும் இலவசங்கள் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்!

புதுதில்லி, டிச. 17 - “இலவசங்கள் அல்லது நலத் திட்டங்கள் நல்ல இலக்கை அடை யும் வரை அதனால் எந்தப் பாதக மான விளைவுகளும் ஏற்படுவ தில்லை. பெறுபவர்கள் ஏழை மக்க ளாக மட்டுமே இருக்கவேண்டும். இலவசங்கள் உண்மையான பய னாளிகளுக்கு செல்லும்போது அது சாதகமான விளைவுகளையே ஏற் படுத்தும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளு நர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இந்தியா டுடேயின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவது. அவர்களை சிறந்த பள்ளிகளுக்கு அனுப்புவது போன்றவற்றிற்கு இலவசங்களை வழங்குவது நல்ல அம்சம்தான். இதை ஏழை குடும்பங்களுக்கு அரசு செய்யும் முதலீடாகக் கருத வேண்டும். இதை சிறந்த தேர்வா கவே பார்க்கிறேன்.  ஆனால், பள்ளிகள், சுகாதாரம்,  ஊட்டச்சத்து போன்ற பிரச்சனை களுக்கு குறைந்தளவே முதலீடு செய்கிறார்கள்.  இலவசங்களின் பலன்கள் இன் னாருக்குத்தான் என்றில்லாம் இலக்கற்றுப் போகும்போதுதான் பிரச்சனை எழுகிறது. நான் எல்லா விதமான தலைவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி யுள்ளேன். யஷ்வந்த் சின்ஹா (பாஜக) நிதியமைச்சராக இருந்த போது நான் அவருக்கும் ஆலோ சனைகளை வழங்கியுள்ளேன் இன்றைக்கு திமுகவுக்கு ஆலோ சனை வழங்குகிறேன். காங்கிரஸ் கட்சியுடனும் பேசினேன். பிற கட்சி களுக்கும் ஆலோசனை வழங்கி யுள்ளேன். தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதுதான் இலக்கு. நம் பொது இலக்கும் அதுதான்.இவ்வாறு ரகுராம் ராஜன் பேசி யுள்ளார்.