புதுதில்லி, ஜூலை 21- சுழற்சி முறைப்படி ஜி.20 மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள் ளது. ஆனால் பாஜகவினரும் மோடி ஆதர வாளர்களும் இது மோடியின் ‘தலைமைத்திற னுக்கு’ கிடைத்த வெற்றி என்று அளந்துவிட்டு, வெற்றுதம்பட்டமடித்து கூவி வருகிறார்கள். விலைவாசியை உயர்த்தி மக்களை வதைத்து வரும் மோடி அரசு, இந்த ஜி.20 மாநாட்டு விருந் தினர்களுக்காக சாலையோரத்தில் வசிக்கும் சொந்த நாட்டு மக்களை விரட்டியடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. புதுதில்லி, காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நகர்ப்புற ஏழை மக்களை வெளி யேற்றுவது குறித்த பொது விசாரணை கடந்த ஜூலை 13 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், மூத்த பத்திரிகையாளர் பமீலா பிலிபோஸ், சிம்லா துணை மேயர் திகேந்தர் பன்வார் மற்றும் பஸ்தி சுரக்ஷா மன்ச் உறுப்பினர்கள் ஷகில், அக்பர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விசாரணை கூட்டத்தின் மூலம், நாட்டின் வடக்கிலிருந்து (புதுதில்லி, காஷ்மீர்) தென்பகுதி (குஜராத், விசாகப்பட்டினம்) வரை உள்ள சாலையோர வியாபாரிகள், குடிசை வாழ் மக்கள் மற்றும் மிகவும் ஏழ்மையான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அவலங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தாண்டுக்கான ஜி20 (G20 - Group of Twenty) மாநாடு 2023 செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற ஏழை மக்களை முற்றிலுமாக வெளியேற்றும் முயற்சி யை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இத னால் ஏழை மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விசாரணைக் கூட்டத்தில், நகர்ப்புற ஏழை மக்கள் வெளியேற்றப்படுவது மற்றும் அவர்களது குடியிருப்புகள் இடிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்களை ஷகில் சமர்ப்பித்தார். அதில், “வெளியேற்றம் மற்றும் குடியிருப்புகளை அகற்றுதல் காரண மாக இந்தாண்டு மட்டும் 2.5 முதல் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளி வந்துள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அந்த இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் களை மீள்குடியேற்றம் செய்வதற்கான முயற்சி கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை இல்லை” என்றார் ஷகில்.
தில்லி நகர் வாழ்விட மேம்பாட்டு ஆணையத் திடம் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதன் மூலம் வழங்கப்பட்ட குடியிருப்புகள்கூட இடிக்கப்பட்டது மட்டுமின்றி, இதுபோன்ற மேலும் 15 குடியிருப்புகளை இடிக்க திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. இந்த விவ காரம் குறித்து ஹர்ஷ் மந்தர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இக்குடியிருப்புகளை இடிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் தடையாணை பெற்ற பிறகு, இதில் 7 குடியிருப்புகளை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. மீதமுள்ள குடியிருப்பு கள் இடிக்கப்பட்டன. இதனால் சாலையோர வியாபாரிகள் மற்றும் குடிசைவாழ் மக்கள் மிகக் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநி லத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டது மட்டுமின்றி, ஜி20 நிகழ்ச்சிகள் முடி வடைந்த பிறகுதான் திரும்பி வர வேண்டும் என எச்சரிக்கப்பட்டனர். ஆனால், பாதிக்கப் பட்ட மக்களுக்கு அவர்கள் வசித்த பழைய இடங்கள் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஏழைகளுக்காக வடிவமைக்கப்படாத நகரங்கள்
நகர்ப்புற ஏழைகளுக்கான குடியிருப்பு களின் சட்டப்பூர்வ தன்மை குறித்து, அரசிடம் விளக்கம் இருக்கிறது என்றாலும், சட்டவிரோத மான வழியை ஏழைகள் தேர்ந்தெடுக்க வில்லையே என ஹர்ஷ் மந்தர் தெரிவித்தார். மேலும், நகர்ப்புற ஏழைகளுக்கு இடமளிக்கும் வகையில் நமது நகரங்கள் வடிவமைக்கப்பட வில்லை. ஏழைகளுக்கு சேவைகளை வழங்கு வதற்கான தன் கடமையை அரசு ஏற்றுக் கொண்டாலும், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக இடமளிக்கும் திறன் நகரத்திற்கு இல்லை. ஒரு முறை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வந்தபோது, ஏழைகள் அனைவரும் மறைத்து வைக்கப்பட்டனர்; ஆனால் தற்போது அவர்கள் வெளியேற்றப் படுகின்றனர் என்றார் ஹர்ஷ் மந்தர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று சமயத்தில், புலம்பெயர் தொழி லாளர்கள் பலர் வீதிகளில் தனித்து விடப்பட்ட அவலநிலையை நாம் நன்கு அறிவோம். இப்போது, நாட்டின் தலைநகரை அழகாக, மேன்மையானதாக மாற்றுகிறோம் என்ற பெயரில் வெளியேற்றப்படும் நகர்ப்புற ஏழை கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மூன்று லட்சம் மக்கள் வெளி யேற்றப்படுவது, கிட்டத்தட்ட ஒரு சிறு நகரத்தையே முற்றிலுமாக இடமாற்றம் செய் வது போலாகும் எனக் குறிப்பிட்டார் மூத்த பத்திரிகையாளர் பமீலா.
பச்சைத்துணிகளால் மூடப்படும் குடிசைப்பகுதிகள்
இந்த ஜி 20 மாநாடு, நகர்ப்புற திட்டமிட லின் உள்ளடக்கத்தைச் சார்ந்த கருத்தை மைய மாகக் கொண்டு நடக்கிறது. இந்த மாநாட்டிற் காக, குடிசைப்பகுதிகள் முழுவதும் பச்சைத் துணிகளால் மூடப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்களின் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படும். தில்லியில் ஏழை மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்ட இடத்திலிருந்த குப்பைகள் அனைத்தும் வெகுசில நாட்களிலேயே முழு மையாக தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும், ‘நாங்கள் ஜி20-ஐ விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடியை பெருமைப் படுத்தி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். தற்போது, நாட்டில் கட்டிடங்களை இடிப்பது புதிய நடைமுறையாக உள்ளது. ஆனால் அது மிகக் கொடுமையானதாக மாறியிருக் கிறது. ஏழை மக்களை வெளியேற்றும் சமயத் தில், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் எடுத்துச் செல்லுமாறு கூறுகின்றனர். சில இடங்களில் 15 நிமிடத்திற்குள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இதில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகிய போது, ‘இந்த வழக்கில் தடையாணை பிறக்கப் பட்டுள்ளது; மக்களை வெளியேற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது. “உச்சநீதிமன்றம் அதன் கடமையை முழுமையாகச் செய்யவில்லை; ஏழை மக்கள் தற்போது நீதியை மட்டுமே நம்பியுள்ளனர்; உச்சநீதிமன்றம் அதன் மக்களை கீழ்நிலைக்கு கொண்டு செல்வது கவலைக்குரியது” என இக்கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.