அகர்தலா, செப்.3- விநாயகரை காக்க வந்தவர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள் ளும் பாஜக கூட்டம் விநாயகரை ஊருக்கு ஏற்றாற் போல், மாநிலத்தி ற்கு ஏற்றாற் போல் பயன்படுத்திக் கொள்கிறது. திரிபுராவில் விநாய கர் சதுர்த்தி கொண்டாடியவர்களை பாஜக தலைவர்கள் தலைமையில் வந்த கும்பல் கொடூரமாக தாக்கி விட்டு, விழா பந்தலை சூறையாடி விட்டு தப்பியோடியுள்ளது. திரிபுரா தலைநகர் அகர்தலா வில் உள்ளது பதி அபோய்நகர் பகுதி. இங்கு விநாயகர் சதுர்த்தி யையொட்டி வழிபாடு நடத்துவதற் காக பந்தல் அமைத்துள்ளனர். இந்தப் பந்தலை பாஜக தலைவர்கள் தலைமையில் இரு சக்கர வாகனத் தில் வந்த கும்பல் ஒன்று, சூறையாடி யதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பதி அபோய் நகரின் உள்ளூர் பகுதிக்குழு உறுப்பினர் கௌதம் தேவ்வை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டது.
படுகாயமடைந்த கௌதம்தேவ்வை மக்கள் அங்குள்ள ஜிஜிஎம் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு அகர்தலா காவல்நிலையத்தை முற்றுகை யிட்டனர். முற்றுகைக்கு கட்சியின் மேற்கு திரிபுரா மாவட்டக் குழு உறுப்பினர் ரத்தன் தாஸ் தலைமை வகித்தார். பின்னர் காவல்துறை அதிகாரிக ளைச் சந்தித்து புகாரளித்தனர். இது குறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய ரத்தன் தாஸ், “ஆளும் கட்சியின் (பாஜக) விசுவாசிகள் இரு சக்கர வாகனத்தில் திரண்டு வந்து விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை சூறையாடியதோடு கௌதம்தேவ் வையும் கடுமையாகத் தாக்கியுள்ள னர். சம்பவம் நடந்து 24 மணி நேரமா கியும் குற்றவாளிகள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த 54 மாதங்களாக திரி புரா மாநிலம் முழுவதும் இதே போன்ற சூழ்நிலை நிலவி வருகிறது. காவல்துறை வெறும் பார்வையாள ராக உள்ளது. மாநிலத்தின் சீர்குலைந் துள்ள சட்டம்- ஒழுங்கை மீட்டெடுக்க காவல்துறை நடுநிலையோடு செயல் பட வேண்டும். மாநிலத்தில் ஜனநாய கத்தை மீட்டெடுக்க மக்கள் ஓரணி யில் திரளவேண்டும்” என்றார். திரிபுரா மாநில எதிர்க்கட்சித் தலைவரும் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் சம்பவ இடத்தைப் பார்வை யிட்டார்.