states

img

முஸ்லிம்கள், பாஜக ஆட்சியில்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்!

போபால், ஜன.15- பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வும், மகிழ்ச்சியாகவும் இருக் கின்றனர் என்று ஆர்எஸ்எஸ்-ஸின் முஸ்லிம் பிரிவான முஸ் லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (MRM) கூறியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்த ரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில தேர்தலையொட்டி, பாஜகவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கும் வகை யில், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தான் அந்த அமைப்பு மேற் கண்டவாறு கூறியுள்ளது. “காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம் களை வெறும் வாக்குவங்கி யாக மட்டுமே பார்க்கின்ற னர். பாஜகவால் முஸ்லிம் களுக்கு அச்சுறுத்தல், பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பன போன்ற போலிப் பிரச்சாரங்களை அக்கட்சி கள் மேற்கொள்கின்றன.  ஆனால், பாஜக-தான் முஸ்லிம்களின் ‘மிகப்பெரிய நலம் விரும்பி’  என்பதை ஒன்றிய அரசும், மாநிலங் களை ஆளும் பாஜக அரசு களும் முஸ்லிம்களுக்காக அறிவித்துள்ள திட்டங்களை பார்த்தாலே தெரியும்.  நரேந்திர மோடி அர சானது, நயி ரோஷ்னி, ரயா சவேரா, நயி உடான், ஷீக்கோ அவும் காமாவோ, உஸ்தாத், நயி மன்ஸில் என, கடந்த 2014 முதல் முஸ்லிம் சமுதா யத்திற்காக 36 திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. 2014-இல் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் மதக் கல வரங்கள், மத ரீதியான வன் முறைகள் குறைந்துள்ளன. ஆகையால் இந்தத் தேர்த லில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி களின் வலையில் விழுந்து விட வேண்டாம். உங்கள் வாக்குகளை விவேகத்துடன் பதிவிடுங்கள். சிறு தவறும் பெருங்கவலையைச் சேர்க் கும்” என்று துண்டறிக்கை யில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக போபாலில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் பயிற்சியை முடித்துச் சென்றபோது, அவர்கள் மீது, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பினர், மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர்.