states

தேர்தல் திருத்த மசோதா அராஜகமாக நிறைவேற்றம்: சிபிஎம் கண்டனம்

புதுதில்லி, டிச. 20- தேர்தல் சட்டங்களில் சில முக்கியமான  மாற்றங்களைக் கொண்டுவந்து திருத்தச் சட்டமுன்வடிவு ஒன்று அவசர கதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.  இதில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவெனில், இந்தச் சட்டமுன்வடிவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்விதமான திருத்தங்களும் கொண்டுவரக்கூட அனுமதி க்கப்படவில்லை.  இது நாடாளுமன்ற நடை முறை விதிகளை முற்றிலுமாக மீறிய ஒன்று. காலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று விவாதம் வந்தது. இந்த முடிவைக் கைவிட்டதுடன், அரசாங்கம் துணை நிகழ்ச்சிநிரல் ஒன்றை மதிய உணவு இடைவேளைக்குப்பின் இந்தச் சட்டமுன்வடி வை அவசரகதியில் கொண்டுவந்திருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு ரகசிய வாக்களிப்பு முறையை மீறும் ஆபத்தை ஏற்படுத்தி இருக் கிறது. இதன்மூலம் வாக்காளரின் அந்தரங்க அடிப்படை உரிமையையும் மீறியிருக்கிறது. இதனை மாநிலங்களவையில் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் தீர்மானகரமான முறையில் உறுதியுடன் எதிர்த்திட வேண்டும்.  இதனை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுககு ஆய்வுக்காக அனுப்ப வேண்டும் என்று கோர வேண்டும்” என கூறியுள்ளது. (ந.நி.)

;