states

கடந்தாண்டைவிட 106 சதவிகிதம் அதிகம்: மார்ச் காலாண்டில் ஐஆர்சிடிசி ரூ. 214 கோடி நிகர லாபம்!

புதுதில்லி, ஜூன் 5- ஐஆர்சிடிசி நிறுவனம், 2021-2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ரூ. 213 கோடியே 78 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.  இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, “இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) 2021-22 நிதியாண்டிற்கான நான்காவது காலாண்டு (ஜனவரி- மார்ச்) முடிவுகளை வெளியிட்டுள் ளது.  இதில், ஐஆர்சிடிசி ரூ. 213 கோடியே 78 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2020-2021 நிதியாண்டின் நான்காவது காலாண்டைக் காட்டிலும் 105.99 சதவிகிதம் அதிகமாகும். அப்போது  ஐஆர்சிடிசி ரூ. 103 கோடியே 78 லட்சம் என்ற அளவிற்கே நிகர லாபம் ஈட்டியிருந்தது. மேலும், 2021-2022 நிதி யாண்டின் நான்காவது காலாண்டில் ஐஆர்சிடிசி தனது செயற்பாட்டு அடிப்படையிலான வருவாயையும் அதிகரித்துள்ளது. ரூ. 690 கோடியே 96 லட்சம் ஈட்டியுள்ளது. இதுவும் கடந்த 2020-2021 நிதி யாண்டின் நான்காவது காலாண் டைக் காட்டிலும் 103.95 சதவிகி தம் அதிகமாகும். அப்போது ஐஆர்சிடிசி நிறுவனம், செயற் ்பாட்டு அடிப்படையிலான வருவா யாக ரூ. 338 கோடியே 78 லட்சம் ஈட்டியிருந்தது.  இந்த லாப நடவடிக்கை கார ணமாக, ஐஆர்சிடிசி நிறுவனத் தின் இயக்குனர்கள் குழு பங்கு ஒன்றுக்கு ரூ. 1.50 டிவிடெண்ட் வழங்க முன்மொழிவு வழங்கி யுள்ளது.