பிதார், (கர்நாடகம்) அக்.7- கர்நாடகாவில் தசரா ஊர்வலத்தின் போது பாரம்பரிய மதரஸாவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இந்துக்கள் சிலர் பூஜை நடத்தி அரா ஜகம் செய்தது சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு தசரா ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது வழியில் இருந்த பாரம்பரிய மதரஸாவுக்குள் ஊர்வலம் சென்ற சிலர் நுழைந்தனர். கட்டிடத்தின் ஒரு பகுதியில் அவர்கள் பூஜை நடத்தி னர். அங்கே ஜெய் ஸ்ரீ ராம், இந்து தர்மம் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட வர்கள் அனைவரையும் கைது செய்யா விட்டால் போராட்டம் நடத்துவோம் என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரித் துள்ளன. இந்த நிலையில் சையது முபாஷிர் அலி அளித்த புகாரின் பேரில், நரேஷ் கவுலி, பிரகாஷ், வினு, மன்னா, சாகர் பந்தி, ஜெகதீஷ் கவுலி, அருண் கவுலி, கோரக் கவுலி மற்றும் மற்றொரு நபர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
1460-ஆம் ஆண்டுகளில் கட்டப் பட்ட, பிதாரில் உள்ள மஹ்மூத் கவான் மதரஸா, இந்திய தொல்லியல்துறை யின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய தளமாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டி யலிலும் இந்த மதரஸா இடம் பெற்றுள்ளது. இந்த அத்துமீறல் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவ தாவது:- மதரஸாவின் பூட்டை உடைத்து கும்பல் உள்ளே சென்றுள்ளது. மதரஸா வின் படிகளில் நின்று “ஜெய் ஸ்ரீ ராம், இந்து தர்மம் வாழ்க” கோஷங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர். பின்னர் கட்டடத்தின் ஒரு ஓரத்தில் பூஜைகள் செய் துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீ னின் தலைவரான அசாதுதீன் ஒவைசி, இந்தச் சம்பவம் “முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாக உள்ளது”. இது போன்ற சம்பவங்களை பாஜக ஊக்கு விக்கிறது என்றார். இந்துத்துவ கும்பல் மேற்கொண்ட அராஜகத்தைக் கண்டித்து பிதார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் போராட்டங் களில் ஈடுபட்டனர். இருப்பினும் நிலை மை கட்டுக்குள் உள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மேகன்னாவர் வெள்ளியன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.