டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
நாடு முழுவதும் சாதிவாரி கணக் கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநி லங்களில் முன்கூட்டியே 2026 அக்டோபர் 1ஆம் தேதி கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி,”நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் செல் போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெ டுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக் கெடுப்பு நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் செல் போன் செயலிகள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யப் படும். செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் உடனுக்குடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வ ருக்கு அனுப்பப்படும். பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப் பின் முதல் பகுதியாக வீடுகள் கணக்கெ டுக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதம் தொடங்கும்” என அதில் கூறப் பட்டுள்ளது.
மக்களவைக்கான நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்காக யாரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வேலைக்கே செல்லாமல் 12 ஆண்டாக ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர் சிக்கியுள்ளார்.