புதுதில்லி, டிச.22- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்தனர். மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும் வியாழக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே புதனன்று நிறைவு செய்யப்படுவதாக அறிவித்தனர். நவம்பர் 29-இல் தொடங்கிய கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் செய்யப்பட்டன. பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்ற நிலைக்குழு விற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முன்ன தாக குளிர்கால கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக்கோ ரியும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. குளிர்கால கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தினம்தோறும் மக்களவையிலும், மாநி லங்களவையிலும் கிளப்பப்பட்டது.