states

img

ஆப்பிள் லாரிகளுக்கு அனுமதி மறுப்பு; சந்தைகளை மூடி போராட்டம்

புதுதில்லி, செப்.29- காஷ்மீரில் ஆப்பிள் ஏற்றிய சரக்கு லாரிகளை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்காததைக் கண்டித்து வியா பாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தை களை அடைத்து போராட்டம் நடத்தி னர். அறுவடை தொடங்கியதில் இருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் வழித்தடத்தில் லாரிகள் செல்ல அனுமதிக்க காஷ்மீர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். விவ சாயிகளிடம் இருந்து சேகரித்து லாரி யில் டன் கணக்கில் ஏற்றி வந்த  ஆப்பிள் பழங்கள் அழுக ஆரம்பித்து வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. திங்கள்கிழமை (செப்.26) முதல் இரண்டு நாட்களுக்கு சந்தைகள் மூடப் பட்டன. சோபோரிலிருந்து வங்காள தேசத்தை ஏழு நாட்களில் அடைய வேண்டிய லாரிகள் இப்போது தங்கள் இலக்கை அடைய 12 முதல் 15 நாட்கள் வரை ஆகும். காஷ்மீரின் 70 சத விகித மக்களை நேரடியாகப் பாதிக்கும் இப்பிரச்சனையைத் தீர்க்க காவல்துறையினரிடம் பேசியதாக ஷோபியான் வணிகத் தலைவர் முகமது அமின் பீர் தெரிவித்தார். நான்கு வருட பின்னடைவுக்குப் பிறகு ஆப்பிள் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் பீர் ஷபீர் கூறினார்.