states

img

தில்லியில் கொடூரம் குடிபோதையில் கார் ஓட்டி 5 பேரைக் கொன்ற இளைஞர்

தில்லியில் கொடூரம் குடிபோதையில் கார் ஓட்டி 5 பேரைக் கொன்ற இளைஞர்

புதுதில்லி தில்லியில் கொடூரம் குடிபோதையில் கார் ஓட்டி 5 பேரைக் கொன்ற இளைஞர் தில்லியின் தென்மேற்கு பகுதியான வசந்த் விஹாரில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அதி வேகத்தில் வந்த சொகுசு கார் மோதியது.  இந்த சம்பவத்தில் இரண்டு தம்பதிகள் மற்றும் 8 வயது சிறுமி உட்பட 5 பேர்  பலியாகினர். அனைவரும் ராஜஸ்தா னைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் என செய்திகள் வெளியாகியுள் ளன. காரை குடிபோதையில் ஓட்டிய  தில்லி துவாரஹாவைச் சேர்ந்த சேகர்  என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள் ளார். அவரிடம் முழுமையாக விசா ரணை செய்யப்பட்டதாக இதுவரை தக வல் எதுவும் வெளியாகவில்லை. தில்லியில் ஊடக கட்டுப்பாடா? இந்நிலையில், கார் விபத்து சம்பவம் ஜூலை 9 அன்று நிகழ்ந்துள்ளது. ஆனால்  4 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஞாயி றன்று (ஜூலை 13) தான் விபத்து சம்ப வம் குறித்து செய்திகள் வெளியாகி யுள்ளன. பாஜக ஆளும் தில்லியில் ஊடக  கட்டுப்பாடா? இல்லை, “கோடி மீடியா” ஊடகங்கள் மூடி முறைதததா? என பல்வேறு சந்தேகம் கிளம்பியுள்ளது. புதுதில்லி ஜூலை 21 அன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேசிய தேர்வுகள் முகமை நடத்திய  இளநிலை மருத்துவ படிப்புக் கான நீட் நுழைவு தேர்வு மே 4  அன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை  எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது.  இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும்  பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025ஆம்  ஆண்டு கலந்தாய்வு அட்டவணை அதி காரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு முதல் சுற்று, இரண் டாம் சுற்று, மூன்றாம் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என 4 கட்டங்களாக நடை பெற உள்ளது. மாநில ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று  கலந்தாய்வு ஜூலை  21ஆம் தேதியும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்  தாய்வு ஜூலை 30ஆம் தேதியும் தொடங்கு கிறது. இதைத் தொடர்ந்து மற்ற சுற்றுகள் நடைபெறும். அனைத்துக் கலந்தாய்வு சுற்றுகளும் முடிவடைந்து, மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசி  தேதி அக்டோபர் 3ஆம் தேதி என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வியாண்டு செப்டம்  பர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்த  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.