கொல்கத்தா, மே 13- ஹூக்ளி ஆற்றின் கரையில் கொல்கத்தாவின் வடமேற்கே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி யான செராம்பூர் மக்களவைத் தொகுதியில் மாணவர் சங்க தலைவருக்கும் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸின் தலைமை கொறடா வும் மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவருமான கல்யாண் பந்தோபாத்யாவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில், இளைஞர்-மாணவர் போராட்டத்தின் தலைவரான தீப்சிதா தர் நுழைந்தது கல்யாண் பதோபாத்யாய்க்கு எதிரான பெரும் சவாலாக உள்ளது. இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணைச் செயலாளரும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியுமான தீப்சிதா தொகுதியில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஹ வுராவைச் சேர்ந்த முப்பது வயதான இவர், வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுத்தப்பட்ட இளம் வேட்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க முகம். முன்பு டச்சு காலனியாக இருந்த செராம்பூர் தொழில் மற்றும் விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இது பெரிய சணல் ஆலைகளின் மையமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்த னர். மம்தாவின் வருகையால் தொழிற்சாலைகள் சுடுகாடுகள் போல் காட்சியளிக்கின்றன. தொழிற்சாலைகள் இருந்த பல இடங்களில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துள்ளன. தீப்சிதா தலைமையில் அத்தொகுதியில் இடது முன்ன ணியின் வலுவான அரசியல் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. மாணவர்களும் இளைஞர் களும் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடது முன்னணி தலைவர் பிமன் பாசு, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், பிருந்தா காரத், மாநில செயலாளர் முகமது சலீம், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். இதற்கிடையில், கல்யாண் பந்தோபாத்யாய் தீப்சிதாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அவதூறுகளை வீசுகிறார். அதைக் கேள்வி கேட்ட வர்களைத் திரிணாமுல் கட்சியினர் வீடுகளில் புகுந்து தாக்கினர். அரசியல் களத்தில் அதிகம் பரிச்சயமில்லாத கபீர் சங்கர் பாசு என்பவர் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். எனினும் சிபிஎம் மற்றும் திரிணாமுல் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. வகுப்புவாத உணர்வு களைத் தூண்டி வாக்குகளைப் பெற திரிணாமுல் மற்றும் பாஜக முயற்சி செய்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமையை பாதுகாத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகின்றன.