பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீடு நடைபெற்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் ஐந்து தொகுதிகளில் களம் காண்கின்றன. இதில் ககாரியா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சஞ்சய் குமார் போட்டியிடுகிறார். கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சஞ்சய் குமாருக்கு ஆதரவாகத் திரண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகளை வேட்பாளரிடம் தெரிவிப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.