வெள்ள நிவாரணம் வழங்க சித்தராமையாவிற்கு சிபிஎம் கோரிக்கை
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு (கல்புர்கி) முதலமைச்சர் சித்தராமையாவிடம் மனு அளித்தது. மேலும் மாநிலம் முழுவதும் வெள்ளப்பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை கண்காணிக்கவும் சித்தராமையாவிற்கு சிபிஎம் கோரிக்கை விடுத்தது.
