states

img

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ - யாத்திரை எதை நோக்கி? - எஸ்.நூர்முகம்மது

காங்கிரஸ் துணைத் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை - இந்திய ஒற்றுமை பயணம்- என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் கன்னியாகுமரியில் 2022 செப்டம்பர் 8ல் துவங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 150 நாட்கள் பயணித்து, காஷ்மீரைச் சென்றடையவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பாத யாத்திரையின் அறிவிக்கப்பட்ட நோக்கங் களுக்கும், நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.  2014ல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் மத்திய ஆட்சியைப் பறிகொடுத்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி  தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வெல்ல முடியவில்லை என்பது மட்டுமல்ல; எதிர் கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரைத் தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வர இயலாத காங்கி ரஸ் கட்சி, சோனியா காந்தி அவர்களையே தற்கா லிகத் தலைவராக தேர்ந்தெடுக்க, அவர் கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிக தலைவராக செயல் படுகிறார்.

உடல்நிலை காரணமாக அவர் நாடு  முழுக்க சென்று பிரச்சாரம்செய்ய இயலாமல் உள்ள நிலையிலும், உட்கட்சியில் பல முரண் பாடுகளாலும் காங்கிரஸ் கட்சி மோடி தலைமை யிலான பாஜகவின் மக்கள் விரோத அரசுக்கு  எதிராக வலுவாகக் களமாட இயலாத நிலை  ஏற்பட்டது. எனவே மூத்த தலைவர்கள் சிலர்  ஒன்றிணைந்து கட்சி பலவீனமடைந்து வருவ தாகவும், எனவே கட்சிக்கு முழு நேரம் பணி யாற்றும் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்றும் பகிரங்க அறிக்கை வெளியிட்டனர். குலாம் நபி ஆசாத் போன்ற சில தலைவர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். தற்போது அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலை வருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ராகுலின் பயணம் நடை பெறுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் - நிலப்பிரபுக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக பாஜக மாறியுள்ள நிலையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி யின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் தஞ்சமடைந் துள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மிகவும் சுருங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியினால் பாஜகவை எதிர் கொள்ள வேண்டுமெனில் அதற்கான தலைமை மட்டுமல்ல, பாஜகவை எதிர்க்கும் கொள்கை வலுவும் காங்கிரசுக்கு வேண்டும். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி எடுத்து வந்துள்ள தவறான கொள்கை நிலைபாடுகளே அக்கட்சியின் இன்றைய நிலைக்குக் காரணம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். வகுப்புவாதத்துடன் அவ்வப்போது சமரசம், மென்மையான இந்துத்துவா நிலைபாடுகளை காங்கிரஸ் கடைபிடித்து வந்துள்ளதால், அக் கட்சியால் பாஜகவின் தீவிர இந்துத்துவாவை நேருக்கு நேர் நின்று தடுக்கவோ, போராடவோ இயலவில்லை.

பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தமட்டில் பாஜக மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து முறியடிக்கும் தார்மீக வலு காங்கிரசுக்கு இல்லை. நவீன தாராள மயக் கொள்கைகளை முதன் முதலில் அறி முகப்படுத்தியது நரசிம்மராவ் தலைமை யிலான காங்கிரஸ் அரசு என்பதை மறுக்க இயலாது. அதன் பின்னர் 1998 முதல் 2004  வரை 6 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பாய்  தலைமையிலான பாஜக கூட்டணி அரசு  அதை மேலும் முன்னெடுத்துச் சென்றது. பொதுத்துறை நிறுவனங்களை விற்க தனி  அமைச்சகமும், அமைச்சரும் நியமிக்கப் பட்டனர். சொல்லொணா துயரங்களை அடைந்த மக்களின் கோபம் 2004ல் பாஜக அரசை வீழ்த்தியது. காங்கிரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரசோடு கொள்கை முரண்பாடு இருந்தபோதிலும் பாஜக  அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல் தடுப்பதற்காக காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமரானார். இடதுசாரிகளால் முன் மொழியப்பட்ட குறைந்தபட்ச பொதுத்திட்ட த்தின் அடிப்படையில் பல மக்கள் நலத் திட்டங் கள் - குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை  உறுதித் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், வனவாசி உரிமைச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டு அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தின. 2008 ல் அமெரிக்கா வுடன் கொண்ட நாட்டு நலனுக்கு எதிரான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டா லும் கூட, இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் அம லான நலத் திட்டங்கள் மன் மோகன் அரசு மீண்டும் 2009 ல் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வர உதவிகரமாக அமைந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சரியாக மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முயலாமல் நவீன தாராளமய கொள்கைகளை, கார்ப்பரேட் நலன் சார்ந்த  கொள்கைகளை மிகவும் வேகமாக இரண்டா வது ஐ.மு.கூ. அரசு செயல்படுத்த துவங்கியது.  இது, அரசு மக்களிடம் அந்நியப்பட்டு நிற்க காரணமானது. பாஜக முதலெடுக்கவும், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியில் அமரவும் கார ணமாகியது. பாஜக அதே நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் வேகத்துடனும், தீவிரத்துடனும் செயல்படுத்துகிற போது காங்கிரசினால் அதை எதிர்க்கும் ஆற்றலோ, தார்மீக பலமோ இல்லாமல் போயிற்று. ராகுல் காந்தி அவர்கள் பாஜகவிற்கு எதிராக பிரச்சா ரம் செய்யும் போது, கார்ப்பரேட்டுகளுக்கு  ஆதரவாக பாஜக செயல்படுகிறது என்று குரல்  எழுப்பினாலும்  மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறது.

எனவே ராகுல் காந்தியின் பயணம் கடந்த  கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு,  எதிர்காலத்தில் அத்தவறுகள் நடக்காது என  உத்தரவாதம் செய்தால் மட்டுமே மக்களின்  நம்பிக்கையைப் பெற இயலும். மேலும் பாஜக வுக்கு எதிராகத்தான் இந்த பயணம் என்று அறிவித்து விட்டு பயணத் திட்டத்தில் இடது சாரிகள் ஆளுகின்ற, பாஜகவிற்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பின ரோ இல்லாத  கேரள மாநிலத்தில் 18 நாட்கள் பிரச்சார பயணம் செய்யும் ராகுல் காந்தி, பாஜக வலுவாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரம்; அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும் குஜராத்தில் நடை பயணம் இல்லை என்ற விபரங்கள், பயணத்தின் நோக்கத்தை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.  கன்னியாகுமரியில் நடைபயணம் துவங்கியது. தமிழகத்தில் இடதுசாரிகளும் உள்ள திமுக அணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்ற நிலையில் அந்த பயணம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது உண்மை. குமரி  மாவட்டப் பயணத்தை முடித்து விட்டு, அப்பய ணம் கேரள மாநிலத்தில் நுழைந்தது முதல் அதன் பயண நோக்கம் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக - பாஜக எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக - இடதுசாரி அரசுக்கு எதிராகவே பிரச்சாரம் அமைந்து வருகிறது. ஏற்கனவே பினராயி விஜயன் அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் சபரிமலையில் இளம் பெண்கள், சாமி ஐயப்பனை வழிபட அனு மதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த போது அதை இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகத் திருப்பி அரசியல் லாபம் அடைய பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் போராட்டக் களத்தில் நின்றதை அனைவரும் அறிவர். ஆனால் அது அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கோ, பாஜகவுக்கோ பலனளிக்கவில்லை. முன்னை விட அதிக பலத்துடன், மக்கள் நல திட்டங் களைச் சிறப்பாக அமலாக்கிய இடது ஜன நாயக முன்னணியை கேரள மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். தற்போது கூட பல தரு ணங்களில் இடது ஜனநாயக முன்னணிக்கு எதி ராக காங்கிரசும், பாஜகவும் கைகோர்த்து நிற்பது கேரள மக்கள் அனைவருக்கும் தெரியும். 

இத்தகைய கூட்டுச் சதிகளை முறியடித்தி டும் ஆற்றல் கேரளாவில்  இடதுசாரிக் கட்சிகளு க்கு உள்ளது. எனவே இதை எதிர் கொள்ள அவ ர்களால் முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி பகி ரங்கமாக அறிவித்துள்ள - பாஜக அரசுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கம் - இங்கு சிதைவடைகிறது.  பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி சமீபத்தில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பெரிய, பிரதான எதிர்கட்சி என்ற நிலையில் தன்னுடைய தற்போதைய நிலை பாடுகளை மாற்றிக் கொண்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று படுத்தி பாஜக எதிர்ப்புச் சக்திகளும், வாக்குகளும் சிதறி விடா மல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இதை காங்கிரஸ் கருத்தில் கொள்கிறதா?  கேரளாவில் இந்த யாத்திரை அந்த நோக்க த்தை நிறைவேற்றும் வகையில் எதிர் கட்சிகளை யும், பாஜக எதிர்ப்பு சக்திகளையும் ஒன்றிணை க்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும். முந்தைய அனுபவங்களிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக பாஜக எதிர்ப்பு சக்திகளைப் பலவீனப்படுத்தி, அவற்றின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாஜகவிற்கு மறைமுக உதவி செய்வதாகவே ஆகிவிடும்.

பாஜகவும், இந்துத்துவா சக்திகளும் வீழ்த்தப்பட வேண்டும், இந்திய மக்களுக்கு இத்தகைய நாசகர சக்திகளிலிருந்து விடுபடும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணு கிற மதச்சார்பற்ற சக்திகளும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே சங்  பரிவாரத்தை வீழ்த்த இயலும் என்பதை உணர்ந்துள்ள மக்களும் இதை காங்கிரஸ் கட்சி க்கு உணர்த்த முன் வருவார்கள் என்று நம்பு வோம். இல்லையெனில் அது காங்கிரஸ் கட்சி க்கு மட்டுமன்றி, இந்திய திருநாட்டின் எதிர்காலத் திற்கும் ஆபத்தாகவே முடியும் அபாயம்உள்ளது.

;