states

img

வரலாறு படைத்த விவசாயிகள் இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

புதுதில்லி, டிச.11- மகத்தான முறையில் வெற்றி பெற்று வர லாறு படைத்துள்ள விவசாயிகள் இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை யும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டி ருப்பதாவது: விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்காகக் கொண்டுவர பபட்ட மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை யும் மோடி அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி ரத்து செய்ய வைப்பதில் வரலாற்று வெற்றி யைப் பெற்றுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்), பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்க ளுக்கும், விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதேபோன்று விவ சாயிகள் போராட்டத்தின்போது அவர்களுக்கு தங்கள் ஆதரவையும் உறுதியான ஒருமைப் பாட்டையும் நல்கிய தொழிற்சங்கங்களுக்கும், இதர ஜனநாயகப் பிரிவினருக்கும் அரசியல் தலைமைக்குழு வாழ்த்துக்களைத் தெரி வித்துக்கொள்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்கள் வாழ்வாதாரங்கள் மீதும் உரிமைகள் மீதும் ஏவப்பட்டுள்ள தாக்குதல்களை ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தின் மூலம் தடுத்து, முறி யடித்து, முன்னேற முடியும் என்பதற்கு ஒளிரும் எடுத்துக்காட்டாக இவ்வியக்கம் திகழ்ந்தி ருக்கிறது. மேலும் இந்த வெற்றியானது ஒன்று பட்ட போராட்டங்கள் மூலம் சாதிய வேறு பாடுகள் மற்றும் இனங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் ஓரங்கட்டிவைத்துவிட்டு, நம்மீது ஏவப்படும் தாக்குதல்களை முறி யடித்துவிட்டு, முன்னேற முடியும் என்பதை யும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்ப தையும் காட்டியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடு முழுதும் இன்று (சனிக் கிழமை) தொடங்குகிறது. இதில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு கட்சிக் கிளைகளுக் கும், இதர முற்போக்குப் பிரிவினருக்கும் அர சியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கி றது. மேலும் நாடு முழுதும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் மற்றும் வேளாண் விளை பொருள்கள் அனைத்திற்கும் உத்தரவாதத்து டன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்ப தற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திட வும், விவசாய நெருக்கடியைத் தீர்த்திடவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள் கிறது.

 ஓராண்டு காலமாக நடைபெற்ற இப்போராட் டத்தின்போது 700க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்கள் அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வ ணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. இறந்த வர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப் பீட்டை அரசாங்கம் அளித்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கி றது. இப்போராட்டம் தொடர்பாக புனை யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் மேலும் காலதாமதம் எதுவுமின்றி விலக்கிக் கொள்ளப் பட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக் குழு கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.       (ந.நி.)

;