வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு
சிக்காச்சி நிறுவனம் அறிவிப்பு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தின் பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் திங்களன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 42 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாய மடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ரசாயன தொழிற்சாலை நிறுவனமான சிக்காச்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல. விசாரணைக்குப் பின் வெடிவிபத்திற்கான காரணம் கண்டறி யப்படும். விபத்து காரணமாக ரசாயன ஆலை 3 மாதம் தற்காலிகமாக மூடப்படும். அதன்பின் உறுதியான கட்டமைப்புக ளுடன் மீண்டும் ஆலை தொடங்கப் படும்” என சிக்காச்சி நிறுவனம் அறி வித்துள்ளது.