states

img

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு கதுவாவில் 7 பேர் பலி; பலரை காணவில்லை

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு கதுவாவில் 7 பேர் பலி; பலரை காணவில்லை

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார்  மாவட்டத்தில் கடந்த வியா ழனன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் பலர் கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சனிக்கிழமை அன்று மாலை நிலவரப்படி  கிஷ்த்வார் மாவட்டத்தில் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி யிருப்பதாக கூறப்படுவதால் பலி  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்  கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீ ரின் பதான்கோட் அருகே உள்ள காதுவா மாவட்டத்தின் ஜோத் காடி பகுதியில் ஞாயிறன்று அதி காலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப் பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்  மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர்  சம்பவ இடத்திலேயே உயிழந்த னர். 5 பேர் காயமடைந்தனர். 50க்  கும் மேற்பட்ட வீடுகள் முழுமை யாக சேதமடைந்துள்ளன. மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. நிவாரணம் இதனை தொடந்து ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்  துல்லா உயிரிழந்தோர் குடும்பத்தி னரின் குடும்பத்தினருக்கு ரூ.2  லட்சமும், பலத்த காயமடைந்த வர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலி ருந்து வழங்கப்படும் என அறி வித்துள்ளார். பதற்றம் ஜம்மு-காஷ்மீரில் கடந்த  5 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து  3 இடங்களில் (கிஷ்த்வார், பஹல்  காம், கதுவா) மேகவெடிப்பு சம்ப வம் நிகழ்ந்துள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளதால்,மீண்டும் தங்கள் பகுதியில் மேகவெடிப்பு நிகழ்ந்து  விடுமோ என்ற அச்சத்தில் ஜம்மு- காஷ்மீர் மக்கள் பதற்றமான சூழ லிலேயே பொழுதை கழித்து வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.