சீனாவின் உள்நாட்டு வளர்ச்சி பெரு மளவில் ஏற்பட்டிருப்பதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான தலைமை மற்றும் வெற்றிகரமான நிர்வாகம் ஆகிய வையே காரணம் என்று பன்னாட்டு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அக்கன் சுவேர்
மர்மரா சமூக ஆய்வு மையத்தின் ஆய்வா ளரான அக்கன் சுவேர், “உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுத்த தற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதான மான, தொடர்ந்து மற்றும் பலனளிக்கக்கூடிய முயற்சிகள்தான் காரணமாகும்” என்கிறார்.
பீட்ரிஸ் மாடிரி-மைசோரி
கென்யாவின் ரியாரா பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் ஒருவரான பீட்ரிஸ் மாடிரி- மைசோரி கூறுகையில், “நாட்டை வறுமை யில்லாத நாடாக மாற்ற சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக இருந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அபிஷித் வெஜ்ஜாஜிவா
“இலக்குகளை அடைவதற்கான நட வடிக்கைகள் கிராமங்கள் வரை நீண்டன. இதுவரை காணாத அளவில் ஏராளமான மக் கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும்” என்று தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜிவா தெரிவித்தார்.
எஸ்ஸாம் ஷரப்
“சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை யான எண்ணங்கள் மற்றும் கோட்பாடுகள்தான் அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களைப் படைத்துள்ளது. ஒரு நூற்றாண்டில் சீனாவின் தோற்றமே மாறிவிட்டது” என்று எகிப்து பிர தமர் எஸ்ஸாம் ஷரப் குறிப்பிடுகிறார்.